அன்புமணியின் செயல்பாட்டினை கொண்டாடும் ஆங்கில ஊடகங்கள் மூடிமறைக்கும் தமிழக ஊடகங்கள் காரணம் என்ன?

கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்த பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் .

இவர் பாராளுமன்ற உறுப்பினரானதும் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகையை தனது சொந்த தொகுதியான தர்மபுரியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே செலவு செய்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே தர்மபுரியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.., அங்கு உள்ள குடிநீரை சோதித்த ஆய்வாளர்கள் அந்த தண்ணீரில் கால்சியம் கார்பனேட் மற்றும் கால்சியம் நைட்ரைட் இயல்பாக இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த பிரச்சனையை போக்கி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கபெறச்செய்ய வேண்டும் என்பதற்காக டாக்டர் அன்புமணி பல திட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார் ..,

இதையும் படிக்க:  விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் இந்த நாரதர் வேலை அவ்வளவு பயமா?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் , பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பல RO சிஸ்டம்களை நிறுவி மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

இன்னும் சில ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை முழுவதும் அழிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டதோடு செயல்பட்டு வருகிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

இந்தியாவிலேயே MP களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தண்ணீருக்கென அதிகம் பயன்படுத்தியவர் அன்புமணி என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள ராஜஸ்தான், பீகார் , சத்தீஸ்கர் மாநிலங்கள் அன்புமணியின் முயற்சியை மேற்கோள்காட்டி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சொந்த மாநிலத்தை சேர்ந்த ஊடகங்கள் செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவருவது ஏன் என பாமக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதையும் படிக்க:  கெத்துக்காட்டிய அதிமுக பாமக அலறும் திமுக விடுதலை சிறுத்தைகள்

©TNNEWS24

Loading...