அன்புமணியை கேள்விகேட்ட தமிழக ஊடகங்கள் இன படுகொலையை செய்த ராகுலிடம் ஏன் இந்த 4 கேள்வியை கேட்கவில்லை பானுகோம்ஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ராகுல் காந்தி ஆனால் அன்புமணியிடமோ , அல்லது பிரேமலதா விஜயகாந்திடமோ ஊடகங்கள் கேள்விகேட்ட தொனியில் ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை ராகுல் காந்திக்கு செல்ல பிள்ளை போலவே நடந்துகொண்டனர்.

இது பற்றி கேள்வி எழுப்பியுள்ள அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் ராகுலிடம் இன்று ஊடகங்கள் கேட்ட கேள்வியின் மூலம் ஒன்று தெளிவாகிவிட்டது அது தமிழக ஊடகங்கள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பது தான்.

இன்று ராகுலிடம் அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் முன்னரே எழுதிக்கொடுக்கப்பட்டது தான் , செய்தியாளர்கள் இந்த 4 கேள்வியை மட்டும் ராகுலிடம் கேட்டிருந்தால் , ராகுலின் அரசியல் அறிவு என்ன என்று தெரிந்திருக்கும் என்பதுபோல் 4 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க:  எங்களை மதிக்காத திமுகவுடன் நாங்கள் எப்படி கூட்டணி வைப்பது.! ராமதாஸ் காட்டம்.

அதில்

1 . மோடி வேண்டாம் என்பதை தவிர நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும்,கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் செய்த சாதனைகள் என்ன என்பதையும் சொல்ல முடியுமா?

2 . உங்களின் கடத்த கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்ததை உங்களால் மறுக்க முடியுமா ? அதற்கு என்ன விளக்கம் தர போகிறீர்கள் ?

3 . தமிழக மக்கள் மீது உங்களுக்கு உண்மையாகவே அன்பு இருந்தால் காவேரி விஷயத்தில் நீங்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருப்பது ஏன் ? கர்நாடகத்தில் முன்னர் உங்களின் ஆட்சியில் தான் தமிழர்கள் அடித்து உதைக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது

இப்போதும் கர்நாடகத்தில் உங்கள் ஆதாரவில் தான் ஆட்சி நடைபெறுகிறது நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் காவேரியின் முழு உரிமையை தமிழகத்திற்கு வழங்க முடியும் அதற்கு உங்கள் பதில் என்ன ?

இதையும் படிக்க:  குஜரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் PUBG க்கு தடையா ?

4 . பிரதமர் வேட்பாளர் மோடி என பாஜக செய்வது சர்வாதிகார ஆட்சி என்று கூறும் நீங்கள் பல தலைவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் என்ற தேசிய கட்சியை 70 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது நியாயமா ?

இந்த கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்டிருந்தால் கூட அதற்கு ராகுலால் பதில் அளித்திருக்க முடியாது

இதற்கு மேலும் இலங்கை தமிழர் படுகொலை பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்தால் ராகுல் மேடையிலேயே அழுதிருப்பார் ஆனால் ஊடகங்கள் அன்புமணி ராமதாஸிடமும் , பிரேமதாலதா விஜய்காந்த்திடமும் காட்டிய வேகத்தில் 1 சதவீதம் கூட ராகுலிடம் காட்டவில்லை என்பதுபோல் கேள்விகளை முன்வைத்தார்.

ஒருவேலை ஊடகங்களின் முதலாளிகள் அனைவரும் திமுகவிடம் கூட்டணி வைத்துள்ளதால் இப்படி அமைதியாக இருக்கின்றனவா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகின்றது.

இதையும் படிக்க:  தீவிரவாதியை கவுரவப்படுத்திய ராகுலே உள்ளே வராதே விரட்டி அடிக்கும் தமிழர்கள் இப்போ தெரியுதா திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைமை இதுதான் போட்டுடைத்த ஊடகம் !

©TNNEWS24