ஆர் ஜே பாலாஜியின் எல்.கே.ஜி படத்திற்கு தமிழில் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் ஜாம்பவான்

முதலில் ரேடியோவில் ஆர் ஜே வாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் காமெடி நடிகராக சிறப்பாக நடித்தவர்தான் ஆர் ஜே பாலாஜி.

இவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் எல்.கே.ஜி , இந்த படத்தில் இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையும் இவரே செய்துள்ளார்.
அரசியலுக்கு வருகிறார் பாலாஜி என்று துவங்கும் இந்த படத்தின் ட்ரைலரில் , சமீபகாலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நகைச்சுவையாக படமாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் , நாஞ்சில் சம்பத் , சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஜெக்கா ஜாக்கப் , மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த ட்ரைலரை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முடி சூடா மன்னன் கபில் தேவ் , இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என் நண்பர் ஆர் ஜே பாலாஜி நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் , அவர் எழுதி நடித்துள்ள எல் கே ஜி படம் மாபெரும் வெற்றிபெற பாலாஜிக்கு படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார் கபில் தேவ்.

இதையும் படிக்க:  சூடு பிடித்தது அரசியல் களம் சந்தானமும் வருகிறார்

இந்த எதிர்பாராத வாழ்த்தை பார்த்து சந்தோஷமடைந்த ஆர் ஜே பாலாஜி இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
………………..
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...