இப்போ எதுக்கு வரீங்க.. தமிழக ஊடகங்களை விரட்டியடித்த திருப்புவனம் மக்கள் !

இப்போ எதுக்கு வரீங்க.. தமிழக ஊடகங்களை விரட்டியடித்த திருப்புவனம் மக்கள்

திருப்புவனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் ராமலிங்கம் என்பவர் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியதற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் தமிழகமே அதிர்ந்துபோய் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்த எந்த விவாதங்களையும் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்களோ முன்னணி பத்திரிகை நிறுவனங்களோ முன்னெடுக்கவில்லை இதனால் தமிழகத்தை சேர்ந்த பத்திரிகை துறையினர் மீது கடும் கோபத்தில் இருந்த ராமலிங்கம் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து தமிழக ஊடகத்தினரை விரட்டி அடித்தனர்.

ஆங்கில ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டு இந்திய அளவில் விவாதித்து வருகின்றன மேலும் நேற்று ட்விட்டரில் ராமலிங்கம் கொலைக்கு நீதி கேட்டு #JUSTICEFORRAMALINGAM என்ற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது இதனால் தமிழக ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு ஏதும் செய்யவில்லை என்று தவறாக நினைக்க கூடாது ஏன்பதற்காக ஒப்பிற்கு வந்ததாகவும்.

இதையும் படிக்க:  மிக உயரிய விருது கிடைத்தாக 20 வருடங்களுக்கு மேலாக பொய் தகவல்களை பரப்பி வந்த பெரியாரிஸ்ட்கள் சிக்கினர்.

உண்மையில் ஊடகங்கள் ஒரு சார்பு தன்மையுடனும் இருப்பதாக கூறி திருப்புவனம் வந்த ஊடகங்களை விரட்டி அடித்திருக்கின்றனர், மேலும் இந்துக்களை தவிர வேறு யாராவது வெட்டப்பட்டால் தமிழக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் அமைதியாக இருப்பார்களா என்று கடும் கோபத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் கேட்பதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது ஊடங்களும், அரசியல்வாதிகளும் சிந்திக்கவேண்டிய நேரமிது.

©TNNEWS24

Loading...