உயிரிழந்த ராணுவ வீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நிதிஉதவி அளித்த – செந்தில் – ராஜலக்ஷ்மி

நாட்டுப்புற இசை கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தனர்.

இவர்கள் சொந்தமாகவே பாடல்களை எழுதி இவர்களே பாடுவது இந்த தம்பதிக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது

இவர்கள் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற பகுதியில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ மொஹம்மது இயக்கத்தை சார்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைலைப்படை தாக்குதலில் பலியான தமிழக வீரரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவ சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்

அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு , சிவச்சந்திரனின் சமாதிக்கு சென்று வீர வணக்கமும் அஞ்சலியும் செலுத்தினர் , பின்னர் அவர்களிடம் 50 ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக வழங்கினர்

இதையும் படிக்க:  பாஜகவில் இருந்து விலகவில்லை..! அந்தர் பல்டி அடித்த பிரபல தமிழ் நடிகை...யார் தெரியுமா.?

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...