எங்களை மதிக்காத திமுகவுடன் நாங்கள் எப்படி கூட்டணி வைப்பது.! ராமதாஸ் காட்டம்.

இன்று பாமகவின் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. அதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அடுத்ததாக எழுந்த கேள்வி யாருடன் கூட்டணி என்பதுதான் தமிழகத்தை பொறுத்தவரை ஒன்று திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுடன் கூட்டணி.

அன்புமணி திமுகவுடன் பேசிப்பார்களாம் என்று ராமதாசிடம் கூறியுள்ளார். அதற்கு ராமதாஸ் காட்டமாக திமுக எப்போதுமே பாமகவை மதிப்பதில்லை எப்படி அவர்களுடன் கூட்டணிவைப்பது.

மேலும் இது கருணாதி காலமல்ல இப்போது தலைவர் ஸ்டாலின் , கருணாநிதி மறைந்த போது அவரது உடலை மெரினாவில் புதைக்க நமது கட்சியின் பாலு தொடர்ந்த வழக்கும் தடையாக இருந்தது. அப்போது பாலுவுடன் பேசி வழக்கை வாபஸ் பெற வைத்தது நான். ஆனால் ஸ்டாலின் எனக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க:  மக்களே உசார் ! உண்மை எது பொய் எது என்று சரியாக பொய் சொல்லும் வலைத்தளம் #fakenews #youturn

ஸ்டாலின் திமுக தலைவரானபோது அவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் நன்றி கூறினர். ஆனால் எனக்கு அறிக்கைமூலம் கூட நன்றி கூறவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக கருணாநிதி சிலைதிறப்பிற்கு கூட பாமகவை அழைக்கவில்லை , அதனால் கண்டிப்பாக திமுகவுடன் மட்டும் கூட்டணிவேண்டாம் என கூறிவிட்டாராம் டாக்டர் ராமதாஸ்.

……………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...