எங்க கண்ணீரை வச்சு காசு சம்பாரிக்குறீங்களே நீங்க நல்ல இருப்பிங்களா ! ஊடகங்களை காரி துப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற ஒருவன் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் 200 மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளான் என்ற செய்தி தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அழகிய பெண்களுக்கு காதல் வலை வீசி ,
அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது தான் இவர்களின் வேலை.

பல பெண்களை இவர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரும் புகாரளிக்க முன்வரவில்லை.

ஒரு பெண் அளித்த புகாரை தொடர்ந்து இந்த கூட்டத்தை போலீசார் கைது செய்துள்ளனர்

இதையும் படிக்க:  குஜராத் அரசுக்கு எட்டியது ஏன் தமிழக அரசுக்கு எட்டவில்லை

இந்த நிலையில் சில ஊடகங்கள் இன்று பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோவை வெளியிட்டது அந்த பெண்களின் பெயரை தவிர முகவரி ஆகியவற்றை பகிரங்கமாக வெளியிட்டனர்.

இன்று சில செய்தியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர் அப்போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள்

“என் டா உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா அதையும் பேட்டியெடுத்து போடுவீங்களா டா எங்க கண்ணீரை வச்சு காசு சம்பாரிக்குறீங்களே நீங்க நல்ல இருப்பிங்களா ! “

என்று கடுமையாக திட்டி அவர்களை அடித்து விரட்டியுள்ளனர் , இப்படி பெண்கள் பாதிக்கப்பட்டு துயரத்தில் உள்ள நிலையில் அவர்களின் விடியோவை வெளியிடுவது , அவர்களை பற்றிய தகவல்களை வெளியிடுவது என செய்து

இதையும் படிக்க:  பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பயங்கரம் பண்ணை வீட்டில் இளம் பெண்களுடன் பிடிபட்ட இளைஞர்கள் !

தங்களது ஊடகத்தின் TRP யை உயர்திக்கொள்ளும் கல் நெஞ்சம் படைத்த ஊடகங்களுக்கு TNNEWS24 கடும் கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறது

நமது TNNEWS24 வலைத்தளம் அந்த பெண்களின் பாதுகாப்புக்கருதியும் , ஊடக தர்மம் கருதியும் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை தயவு செய்து பெண்களின் விடியோவினை பகிர்வதை தவிர்த்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டுமே தவிர பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்.

©TNNEWS24

Loading...