எதிரிகளை தமிழகத்திலேயே சந்திக்கிறார் மோடி செய்தி வெளியிட்ட DNA தொலைக்காட்சி களப்பணியாற்ற தயாராகும் தொண்டர்கள்!

திருப்பூர்

யாரும் எதிர்பார்க்காத தகவல்களை வெளியிட்டிருக்கிறது DNA தொலைக்காட்சி பிரதமர் மோடி இந்தமுறை தனது இரண்டாவது தொகுதியாக திருப்பூர் அல்லது கன்னியாகுமரியை தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லி இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக- விற்கு எதிர்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் சொல்லிவரும் வரும் வேலையில் பாஜகவிற்கு ஆதரவான தீவிர இந்து அமைப்புகள் அடங்கிய தொகுதியான திருப்பூர் தொகுதியை மோடி தேர்வு செய்ய இருக்கிறாராம்.

அதிமுக பாஜக கூட்டணி இந்த தொகுதியில் வலுவாக இருப்பதாலும் மேலும் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தவதற்காகவும் மோடி இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் டி என் ஏ செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கென ரகசியமாக களப்பணிகள் நடந்துவருவதாகவும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிக்க:  இஸ்லாமியரான அன்வர் ராஜா மோடிக்கு ஓட்டு கேட்பது தவறு என்றால் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்த திமுக ஓட்டு கேட்டு வந்தால்..,

இதுமட்டும் உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் பாஜகவிற்கு எதிர்ப்பு இருப்பதாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் தூள் தூளாகும் என்றும் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடத்தினை வெல்ல வாய்ப்பிருப்பதாகும் தெரிவித்திருக்கிறது.

இந்த செய்தி கேள்விப்பட்டது முதல் தமிழக பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் சந்தோசம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று இப்போதே சமூகவலைத்தளங்களில் முடிவு செய்து தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் பாஜக எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம் என்பதை தமிழகத்திலும் நிரூபித்து எதிரிகளை அதன் குகைகளிலே வீழ்த்திய பெருமை மோடியை சேரும். ந்தத் தகவலை தமிழில் முதலில் வெளியிடுவது நமது TNNEWS24 ஊடகமே

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  இதனால்தான் பாஜகவில் இணைந்தேன் !