எப்படியாவது பாஜக- அதிமுக கூட்டணி சேராமல் தடுக்க வேண்டும் – தம்பிதுரைக்கு சசிகலா போட்டுள்ள ஆர்டர்

வரும் பாராளமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது , ஆனால் அதிமுகவின் மூத்த நிர்வாகியும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.


ஆனாலும் அதிமுக தலைமை பாஜகவுடன் நெருக்கமாகவே உள்ளது , இந்த கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.

தம்பிதுரை இவ்வாறு பாஜகவை விமர்சிக்க காரணம் சிறையில் இருக்கும் சசிகலா தான் தம்பிதுரையிடம் எப்படியாவது அதிமுக , பாஜகவை கூட்டணிசேரமால் பிரிக்க வேண்டும் என்ற பொறுப்பை தம்பிதுரையிடம் ஒப்படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த விசயம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவரவே அதனால் தான் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் தம்பிதுரையுடன் தொடர்பில் இல்லை , கட்சியின் பல முடிவுகள் தம்பிதுரைக்கு தெரிவிப்பதே இல்லை.

இதையும் படிக்க:  இலங்கையில் பறக்கும் தட்டில் வந்திறங்கிய வேற்றுகிரகவாசி பயந்து ஓடிய மக்கள் ..!

சிலர் தம்பிதுரையை சசிகலாவின் பிடியிலிருந்து மீட்க முயற்சித்த போது நான் MGR காலத்திலிருந்து கட்சியின் முக்கியபொறுப்பில் இருக்கிறேன் எனக்கு யாரும் அறிவுரை சொல்ல தேவை இல்லை என்று கண்டிப்பாக கூறுகிறாராம்.

எனவே எப்படியாவது கூட்டணியை முறியடித்து பாஜகவின் எதிர்ப்பை எடப்பாடி ஒபிஸ் மீது திருப்பி ஆட்சியை கவிழ்த்துவிட்டால் நாளை தினகரனுடன் இணைந்து முக்கிய பொறுப்பில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடிவெடுத்திருக்கிறார் தம்பிதுரை எனவேதான் அதிமுக பாஜக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்று குறியாய் இருக்கிறாராம்.

©TNNEWS24
……………………..
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  அமெரிக்காவில் இந்தியர்கள் புல்வாமா தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Loading...