எப்படியும் அந்த மனுஷன்தான் ஜெயிப்பாரு நான் போட்டிக்கு வரவில்லை – சரத்பவார் பேட்டி !

எப்படியும் அந்த மனுஷன்தான் ஜெயிப்பாரு நான் போட்டிக்கு வரவில்லை – சரத்பவார் பேட்டி

மகாராஷ்டிரா

நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது, நாளுக்கு நாள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் ஒரு மிக பெரிய தலைப்பு செய்தியாக, நாளிதழ்களில் இடம்பெற்றுவரும் செய்திதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அதோடு நாங்கள் தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மகாராஷ்டிரா மாநில தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்தார். ஆங்கில செய்தி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் ஏன் நீங்கள் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:  தமிழகத்தை ஸ்விப் செய்கிறது பாஜக கூட்டணி கொங்கு மற்றும் வடமாவட்டங்களில் திமுக டெபாசிட்டை பறிகொடுக்குமாம் வெளியானது கருத்து கணிப்பு !

அதற்கு நாங்கள் திடீரென இந்த முடிவை எடுக்கவில்லை கட்சியின் செயற்குழு, பொதுக்குழு இணைந்து எடுத்த முடிவு என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் எப்படியும் இந்த தேர்தலில் அவர்தான் (மோடி ) ஜெயிக்கபோகிறார் எதற்கு பிரச்சாரம் செய்து நேரத்தை வீணாக்க என்று சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறினார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஒருவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டது மற்றும் மோடிதான் அடுத்த பிரதமர் என்று கூறி அமைதியானது இந்திய அரசியலில் மோடிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...