ஐயா என்னை மன்னிச்சுருங்க இனி எப்பவும் மதம் குறித்து பேசமாட்டேன் விஜய் சேதுபதி அறிக்கை

சென்னை

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நாயகன்களில் விஜய் சேதுபதியும் ஒருவர், இவரது நடிப்பின் மூலம் சிறிது காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சபரிமலை விவகாரம் பெண்கள் உரிமை என்றும் அவர்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இது பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியது மேலும் கேரளாவில் இனி விஜய் சேதுபதி படங்களை திரையிட்டால் படத்தினை ஓட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் போர் கொடி தூக்கினர்.

இதனால் விஜய் சேதுபதிக்கு வியாபார ரீதியாகவும் சிக்கல் எழுந்தது. மேலும் இந்து மதத்தின் கலாச்சாரத்தை விமர்ச்சிக்கும் விஜய் சேதுபதி மற்ற மதங்களின் விசயத்தில் தலையிட்டு கருத்து சொல்லுபாரா என பலரும் வேதனை தெரிவித்து வந்தனர்.

இதையும் படிக்க:  வருங்கால துணை பிரதமருக்கு வந்த சோதனை !

இந்நிலையில் ஏறியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் விஜய் சேதுபதி பகவத்கீதை குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக இணையத்தில் வைரலாக போஸ்டர் ஒன்று பரவியது இதனால் பலரும் இனி நான் விஜய் சேதுபதி படங்களை பார்ப்பதை தவிர்ப்பேன் என்றும் வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் பெரும்பான்மை மதத்தினரை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கண்டனங்களை பதிவு செய்தனர்.

இது விஜய் சேதுபதிக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தவே இன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டார் அதில் நான் பகவத்கீதை குறித்து எங்கும் பேசவில்லை பேசவும் மாட்டேன் அந்த செய்தி போலி என்றும் இனி இந்து மதம் குறித்து எந்த காலத்திலும் விமர்சனம் செய்யமாட்டேன் என்றும் யார் மனதும் புண் ட்டிருந்தால் சபரிமலை விமர்சனம் குறித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இதையும் படிக்க:  பள்ளிவாசல் முன் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தடை...!

முன்னொரு காலத்தில் சினிமா நடிகர்கள் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து மதத்தினை மட்டும் விமர்சித்து வந்தது தற்போது சமூகவலைத்தளங்களில் எழுச்சியால் இப்போது மக்கள் மத்தியில் இந்து மதம் குறித்து தவறாக பேசுபவர்களின் எண்ணங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதால் மக்களுக்கு உண்மை தெரிந்து அவர்கள் படங்களை தவிர்த்து விடுகிறார்கள்.
©TNNEWS24

Loading...