ஓட்டிற்காக நாட்டினை விட்டுக்கொடுக்காத நபர் மோடி மட்டுமே 28 முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர் மீண்டும் காவி கொடிதான் பறக்குமா?

இந்தியாவிலேயே அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் , உ.பியில் மட்டும் 80 மக்களவை தொகுதிகள் உள்ளது.

எதோ ஒரு கட்சி உத்தரப்பிரதேசத்தை கைப்பற்றினால் அந்த கட்சி எளிதில் ஆட்சியமைத்து விடும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது.

மீண்டும் இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் கையே ஓங்கியிருக்க போகிறது என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன, அதற்கு காரணம் கடந்த ஒரு மாதத்தில் உத்தரபிரதேசத்தில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் 28 பாஜகவில் இணைந்துள்ளனர்.

அதில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 15 முக்கிய தலைவர்கள் ஒரே மாதத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர், அவர்கள் அனைவரும் பகுஜன் சமாஜ் கட்சியில் MP ,MLA வாக இருந்தவர்கள்.

இதையும் படிக்க:  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றிபெறுவாரா? என்ன சொல்கிறது தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவு !

அதிலும் முக்கியமாக கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் விஜய் பிரகாஷ் ஜெய்ஷ்வால் பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேசம் பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது அனைத்து முக்கிய தலைவர்களும் தங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

எனவே மீண்டும் உத்திரபிரதேசத்தில் காவி கொடி பறக்குமா என பாஜக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.

©TNNEWS24

Loading...