கம்யூனிஸ்ட்கள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது ! வெடி வெடித்து கொண்டாடிய பாஜக !

கம்யூனிஸ்ட்கள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது ! வெடி வெடித்து கொண்டாடிய பாஜக

சென்னை

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இன்று மாலை அறிவிக்க இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஆனால் தனியார் தொலைக்காட்சியான சத்தியம் டிவி முதலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என பிரத்தியேக தகவலை கொடுத்து அவைதான் உறுதியான பட்டியல் என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தமுறை

மதுரை, கோயமுத்தூர் தொகுதியினை திமுக ஒதுக்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதியினை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பாஜக இளைஞர் அணியினர் சண்முகம் தலைமையில் 30 பேர்கொண்ட குழுவினர் சரவெடிகளை கொளுத்தி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க:  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றிபெறுவாரா? என்ன சொல்கிறது தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவு !

குறிப்பாக அதிமுக, பாஜக பலமாக உள்ள கோயமுத்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்கியதன் மூலம் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை கோவையை பாஜக கைப்பற்றும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...