கலாச்சார சீரழிவிற்கே உங்க பெரியார் கொள்கைதான் காரணம் பொள்ளாச்சியில் விரட்டப்பட்ட கௌசல்யா, பனிமலர் ?

கலாச்சார சீரழிவிற்கே உங்க பெரியார் கொள்கைதான் காரணம் பொள்ளாச்சியில் விரட்டப்பட்ட கௌசல்யா, பனிமலர் ?

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல சென்ற கௌசல்யா மற்றும் பனிமலர் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டு பெண்ணின் உறவினர்களால் விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை தற்போது உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து பின்பு தங்களது ஆசைக்கு பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் பிடிபட்டதுதான்.

இவர்களின் வலையில் தற்போது ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுருக்கலாம் எனவும் அவர்களும் முன்வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தியும் பரவியுள்ளது.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளியானதில் இருந்தே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரையும் சந்திப்பதை தவிர்த்துவந்தனர், மேலும் தங்களது பாதிப்பானது அரசியலுக்கு பயன்படுத்துவதாக வேதனை அடைந்துவந்தனர்.

இதையும் படிக்க:  பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்துவந்துள்ள கிறிஸ்தவகாப்பக உரிமையாளர்கள்!

இந்த சூழலில் பனிமலர் மற்றும் கௌசல்யா என்ற இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ஆறுதல் சொல்ல சென்றபோது அவர்கள் பாதி வழியில் உறவினர்களால் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

அதில் தற்போது சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளுக்கு பெரியார் கொள்கையும் ஒரு காரணம் என்றும் தனது நூலில் காமம் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவன் யாருடன் வேண்டுமானாலும் காமத்தை கழித்து கொள்ளலாம் என இடம்பெற்றிருப்பது, பெண்களும் ஆண்கள் போல் எத்தனை பெறவேண்டுமாலும் விருப்பத்தினருடன் செல்லலாம் என்ற கருத்துக்கள் போன்றவையே தற்போது தமிழகத்தின் சீர்கேட்டிற்கு காரணம் என்றும்..,

எனவே பெரியார் கொள்கையை பின்பற்றும் இருவரும் தங்களது பிள்ளையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் மேலும் இந்த சந்திப்பு அரசியலுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திலும் உறவினர்கள் இவர்களை திருப்பி அனுப்பியதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதையும் படிக்க:  அடேங்கப்பா இந்த பெண்ணை திருமணம் செய்யத்தான் மதம் மாறினாரா குறளரசன் வெளியானது சீக்ரட்?

இவை குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் தெரியாதபட்சத்தில் சமூகவலைத்தளங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பத்தூரில் பெண் ஒருவர் பெரியார் கொள்கையை பின்பற்றுபவர் என தெரிந்ததும் மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...