கைதாகிறார் புளு சட்டை மாறன்  , இயக்குனரை மிரட்டி பணம் பறித்தது அம்பலம் 

தமிழ் டாக்கீஸ் என்ற youTube சேனலின் மூலம் தமிழ் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் தான் மாறன்அவர் எப்போதும் புளு சட்டை அணிந்து படங்களை விமர்சனம் செய்வதால் அவரை புளு சட்டை மாறன் என்று அடையாளப்படுத்துவார்கள் 

இது போன்று பலர் YouTube மூலம் விமர்சனம் செய்தாலும் , மாறன் மிகவும் பிரபலம் அதற்கு காரணம் அவர் மற்றவர்களை போலா அல்லாமல் புதுமையான வகையில் பேசுவார் 

அவர் விமர்சனம் செய்த படங்களில் 90 சதவீத படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களையே கூறியுள்ளார் . மேலும் இவர் விமர்சனம் செய்யும் போது நடிகர்,நடிகை , இயக்குனர்களை ஒருமையில் பேசுவது வழக்கம் 

சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின் 2  , அந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார் . இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது 

இதையும் படிக்க:  சபரிமலையில் இரண்டு பெண்களை மாறுவேடத்தில் அனுப்பிவைத்த பினராயி விஜயன்!

இந்த படத்தை விமர்சனம் செய்த மாறன் , இதற்கும் வழக்கம்போல  எதிர்மறையான விமர்சனம் கூறியதுடன் படத்தின் இயக்குனரையும் ஒருமையில் சாடினார் , மேலும் இந்த படத்தை யாரும் திரையரங்கு  சென்று பார்க்க வேண்டாம் என்றும் கூறினார்.

இதனால் கடுப்பான இயக்குனர் சக்தி சிதம்பரம் மாறனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேற்க அதற்கு மாறன் தவறான வார்த்தைகளில் திட்டியதாகவும் , பணம் கேட்டு மிரட்டும் தோனியில் பேசியதாகவும் கூறி சக்தி சிதம்பரம் போலீசில் புகார் அளித்துள்ளார் 

இதை செய்தியாளர்களிடம் கூறிய சக்தி சிதம்பரம் , மாறன் பல இயக்குனர்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறினார் , மாறன் போன்றவர்களை கைது செய்தால் தான் இயக்குனர்கள் நிம்மதியாக படம் எடுக்க முடியும் என்றும் கூறினார் 

இதையும் படிக்க:  வாரணாசிபோல் இராமநாதபுரம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள் !

இது போன்ற பல புகார்கள் அவர்மீது உள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் இவரை காவல் துறையினர் கைது செய்து விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளது 

Loading...