கொங்கு பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தி 1652 கோடி செலவில் நிறைவேறுகிறது அத்திக்கடவு அவிநாசி திட்டம்

இன்று கோவை வையம்பாளையம் பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவிற்கு மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்துவைத்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் அதிகமாக பயனடைந்திருப்பது தமிழகம் தான் என்று கூறினார்.
மேலும் கொங்குப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக 1652 கோடிக்கு ஒப்பந்த புள்ளிகள் கூறப்படத்துள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி.

இந்த திட்டம் நிறைவேறினால் கோவை , திருப்பூர் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யபடுவதுடன் , விவசாயத்திற்கான தண்ணீர் தேவையும் பூர்த்திசெய்யப்படும்.
……………………..
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  மோடி குறித்து நான்தான் தவறாக புரிந்துகொண்டேன் மன்னித்து விடுங்கள் - பிரகாஷ்ராஜ்
Loading...