சட்டப்பேரவைக்குள் கிரிக்கெட் ஆடிய அமைச்சர்கள்..!

கடந்த 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது அதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த பட்ஜெட்டில் ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது , அந்த 2000 ரூபாய் இந்த மாத இறுதிக்குள் வங்கிக்கணக்கில் இருப்புவைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று செம்மலை பேசும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹாட்ரிக் சிக்சர்கள் அடிப்பார் என்று கூறியிருந்தார்

அதை குறிப்பிட்டு பேசிய திமுகவின் பொன்முடி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வீசும் பந்தில் முதலமைச்சர் கிளீன் போல்ட் ஆவார் என்று கூறினார்

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் வீசும் பந்துகள் அனைத்துமே நோ பால் தான் என்று கூறினார்.

இதையும் படிக்க:  மகளுக்கு அமெரிக்காவில் படிப்பு கோவையில் சொகுசு பங்களா எங்கிருந்து வருகிறது பணம்?

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி எதிர்க்கட்சி தலைவர் மைதானத்திற்குள் வராமலே பந்துகளை வீசிக்கொண்டிருப்பதாக கூறினார்.

இப்படி அமைச்சர்கள் மாறி மாறி பத்து வீசியதில் சட்டப்பேரவைக்குள் சிரிப்பலை எழுந்தது

©Tnnews24

Loading...