சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த எந்த முக்கிய அம்சமும் பட்ஜெட்டில் இல்லை – ஸ்டாலின் வேதனை !

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து எந்த முக்கிய அம்சமும் பட்ஜெட்டில் இல்லை – ஸ்டாலின் வேதனை

சென்னை

2019- 20 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சரும் நிதி அமைச்சரும் ஆகிய பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

O.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரை ஆற்றினார் .
டாஸ்மாக் கடைகளை மூடுவது , மெட்ரோ ரயில் திட்டம் தொடக்கம், தமிழ் மொழி வளர்ச்சி ஊக்குவித்தல் , பாசனத்துறை மற்றும் நீர்வள ஆதாரம் உள்ளிட்ட பல துறைகளின் கீழ் திட்டங்களை அறிவித்தார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை நிகழ்த்தினார் .

இதையும் படிக்க:  ஒருமுறை கூட முதலமைச்சர் இல்லை அதனால் தான் கடைசி இடம் ஒதுக்கினோம் மேற்குவங்க அரசு தகவல்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்றும் தமிழக மக்களின் நலன்கள் வேலைவாய்ப்புகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை, ஒரு கோடி இளைஞர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் இதுகுறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் சிறுபான்மையினர் உதவி தொகை மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நிதியை அரசு அதிகரிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் மொத்தத்தில் இந்த பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் போடப்படும் பட்ஜெட்டில் சிருபான்மையினர் நலன் குறித்து அதிகம் கருத்தில் கொள்ளப்படும் என்றார்.

இதையும் படிக்க:  இந்துக்கள் திருமண விழா மகா கேவலமானது முஸ்லீம் திருமணவிழாவில் ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மையினர் நலன் கண்ணுக்கு தெரிந்த ஸ்டாலினுக்கு அதே சிறுபான்மையினரால் வெட்டி கொல்லப்பட்ட ராமலிங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா என்று சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

©TNNEWS24

Loading...