டெல்லியில் பாஜக சார்பில் சதம் அடிக்கிறார் கவுதம் காம்பிர்

டெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் , கடந்த 2003 ஆண்டு முதல் முதலாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட துவங்கினார்.

தொடர்ந்து 11 ஆண்டுகள் 2013-ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய கவுதம் , 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு அணியில் இடம்பெற தவறினார்.

என்ன தான் ஐபில் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் அவர் இந்திய அணிக்காக அழைக்கப்படவில்லை அதற்கு காரணம் ரோஹித் சர்மா , தவான் என்னும் சிறந்த துவக்க வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபில் போட்டிகளிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் பாதியில் விலகிக்கொண்ட நிலையில் அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளார் காம்பிர்

இதையும் படிக்க:  மிக உயரிய விருது கிடைத்தாக 20 வருடங்களுக்கு மேலாக பொய் தகவல்களை பரப்பி வந்த பெரியாரிஸ்ட்கள் சிக்கினர்.

இந்து மதத்தின் மீது அதீத பற்றுக்கொண்ட கவுதம் காம்பிர் பாஜகவில் இணைந்துள்ளார்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியின் ரஜீந்திர நகர் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜீந்திர நகர் தொகுதி அவரின் சொந்த தொகுதியாகும் , கவுதம் காம்பிர் அந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அவரின் வெற்றியும் 100 சதவீதம் உறுதியாகியுள்ளது என ஆங்கில பத்திரிகைகள் தெரிவித்து வருகின்றன

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் , டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் நிச்சயம் பாஜக தான் வெல்லும் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கவுதம் காம்பிரின் வருகை பாஜகவை மேலும் பலப்படுத்தியுள்ளது. மறைந்த இந்திய ராணுவ வீரர்களின் குழந்தைகள் பயிலுவதற்காக டெல்லியில் காம்பிர் தனியாக பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை போக சொன்னாங்க போனோம்

©TNNEWS24

Loading...