தமிழகத்தில்தான் இந்த அதிசயம் மோடிக்கு சைக்கிளில் சென்று வாக்கு கேட்பது யார் என்று தெரியுமா

அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெற வேண்டி தனது வேலையை விட்டுவிட்டு தினமும் 50 கிமீ தூரம், சைக்கிளில் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காளியப்பன்.

புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினரான இவர் தனியார் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர் குடியிருக்க வீடு இல்லாத நிலையில் குடிசையில் வாழ்ந்துவந்தார் , பின்னர் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பணம் பெற்று வீடு கட்டியுள்ளார்.

நான் இன்று நிம்மதியாகி கான்க்ரீட் வீட்டில் வாழ காரணம் மோடி தான் என்று கண்ணீர் மல்க கூறிய அவர் , தான் உறுப்பினராக இருக்கும் புதிய தமிழகம் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கூறினார்.

இதையும் படிக்க:  கதிர் ஆனந்தின் தேர்தல் வாழ்கை முடிந்தது அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! திருப்பி தாக்கிய பிரசன்னா?

எனவே தான் கடந்த 1 ஆம் தேதி தனது சைக்கிளில் அதிமுக , பாஜக,பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கொடியை கட்டிக்கொண்டு தனது சொந்த ஊரில் பிரச்சாரத்தை துவங்கினார்.

கடந்த 10 நாட்களில், 500 கிமீ மேல் சைக்கிளில் பயணித்துள்ள “காளியப்பன்” தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

அன்று மோடி தமிழகம் வந்தபோது ஒன்றை கூறினார் பலர் என்னை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யலாம் ஆனால் நான் ஏழைகளுக்கு தொடர்ந்து ஊழல் இன்றி உதவிக்கொண்டே இருப்பேன் சாமானியனை எட்டும் வரை என்று சொல்லி இருந்தார் காளியப்பன் போன்றவர்களை பார்க்கும் போது மோடியின் லட்சியம் நிறைவேறியதாகவே இருக்குமோ என்று தோன்றுகிறது.

இதையும் படிக்க:  சொன்னபடி ட்விட்டரில் தெறிக்கவிடும் பாஜக ஆதரவாளர்கள் திமுக 80 லட்சம் செலவு பண்ணியும் பலன் இல்லை !

©TNNEWS24

Loading...