தமிழன் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கொதித்தெழும் இந்தியா.. இப்போதெரியுதா தமிழனுக்கும் வட இந்தியனுக்கும் என்ன தொடர்புன்னு

இப்போ தெரியுதா தமிழனுக்கும் வட இந்தியனுக்கும் என்ன தொடர்புன்னு? தமிழன் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து வட இந்தியா முழுவதும் நடைபெறும் மிக பெரிய போராட்டம்

உத்திரபிரதேசம்
திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கடந்த வாரம் மதமாற்றத்தை தடுத்த செயலுக்காக அநியாயமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் தற்போது அவரது குடும்பமே அவரை இழந்து அனாதையாக தவிக்கிறது.

இதுவரை தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் பலரும் ராமலிங்கம் படுகொலையை கண்டிக்கவில்லை சிலரோ கொலையை நியாயபடுத்தி அறிக்கை விடுகின்றனர்.

இதற்கிடையில் தமிழன் ராமலிங்கம் படுகொலை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இங்கு சிறுபான்மை இனத்தவரால் மதம் மாற்றத்தை தட்டி கேட்ட குற்றத்திற்காக கொலை செய்ய படுவதா என்று இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆர்பித்துள்ளன.

இதையும் படிக்க:  ராணுவம் குறித்து ஸ்மிருதி இராணி இப்படி பேசினாரா ? உண்மை என்ன ?

தமிழகத்தை தாண்டி வட இந்தியர்கள் மத்தியில் தங்கள் சகோதரனை இழந்து விட்டதாகவும் இனியும் இதுபோன்று யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதை வலியுறுத்தி உத்திரபிரதேசம் முசாபர் நகரில் இந்து அமைப்புகள் ஒன்று கூடி நேற்று முழுவதும் கடை அடைப்பு மற்றும் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அஞ்சலியை ராமலிங்கத்திற்கு செலுத்தினர்.

அதுமட்டுமின்றி ராமலிங்கம் குடும்பத்திற்கு தேவையான நிதிகளையும் திரட்டி வருகின்றனர் மேலும் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தற்போது வட இந்திய மாநிலங்கள் முழுவதும் தமிழன் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் எழுந்துவருகின்றன.

ஆனால் நாங்கள் தமிழர்களுக்கான அமைப்புகள் என்று சொல்லும் பல அமைப்புகள் தமிழன் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு ஆர்ப்பாட்டங்கள் கூட தமிழகத்தில் நடத்தவில்லை.

இதையும் படிக்க:  ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி !

சில அமைப்புகள் தமிழனுக்கும் வட இந்தியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிவந்த வேலையில் தற்போது தமிழன் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமிழனுக்கும் வட இந்தியனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது தெரிகிறதா என பலரும் தங்கள் கருத்துக்களை பிரிவினைவாத இயக்கங்களை நோக்கி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

© TNNEWS24
………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...