தாமரை மலராது மலராதுனு சொல்லியே மலர வச்சுட்டாங்க உளவுத்துறை அறிக்கை.. தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின்.

திருப்பூர்
பிரதமர் மோடி கடந்த ஞாயிறு அன்று திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் இது அனைவரும் அறிந்த செய்தி ஆனால் இப்போது தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றை கலக்கும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

அதாவது எப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டங்களும் இணையத்தில் மோடி திரும்பி செல் என்ற வாசகங்களும் இடம்பெறும்.
இதற்கு காரணம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபின்பும் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வந்ததே ஆகும்.

அதன் பிறகு மோடி தமிழகம் வரும்போது பொதுமக்கள் இடையேயான எதிர்ப்புகள் குறைந்து வைகோ போன்றவர்கள் மட்டுமே கருப்பு கொடி காட்டிவந்தனர் ஆனால் இதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்க ஆரம்பித்தனர்.

மோடி வரும்போது தற்போது அவரை திரும்பி செல்ல சொல்பவர்களுக்கு இணையாக #TNWELCOMESMODI என்று தமிழக மக்களும் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் திராவிட கழகங்கள் வேண்டுமென்றே இந்து மதத்தினை விமர்சனம் செய்வது சாமானிய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  எங்களை மன்னித்து விடுங்கள் ,எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்தியாவிடம் கெஞ்சும் பாக்கிஸ்தான்.

இதனால் நடுநிலை இந்துக்களாக இருந்த பலரும் தீவிர இந்துமத ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு ராமலிங்கம் படுகொலை போன்ற முக்கிய நிகழ்வுகளும் காரணம்.

பிரதமரின் திருப்பூர் வருகை கூடும் கூட்டம் குறித்து திமுக தரப்பில் தனியார் நிறுவனங்களை வைத்து ரகசிய சர்வே எடுத்திருக்கிறார்கள் அதில் எதிர்பார்த்த கூட்டத்தை விட அதிக அளவிலான தொண்டர்கள் திருப்பூரில் திரண்டதாகவும், அனைவரும் திமுக மீது மிக பெரிய கொந்தளிப்பில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் திமுக பெரியாரிஸ்ட்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுமட்டுமல்லாமல் இந்து தெய்வங்கள் திருமண முறை குறித்து விமர்சனம் செய்வது ஆகிய காரணங்களை தந்திருக்கிறார்கள் மேலும் தாமரை மலராது மலராது என்று சொல்லியே எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் தாமரை சின்னம் மற்றும் மோடியை மனதில் பதியவைத்து விட்டதாகவும்.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த வைகோ வெடிவெடித்து கொண்டாடிய பாஜகவினர்.. எந்த ஊரில்

இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி கொங்குமண்டலத்தை கைப்பற்றும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள், இதை கேள்விப்பட்டது முதல் ஸ்டாலினுக்கு தூக்கம் தொலைந்து விட்டதாம் தேவையில்லாமல் பாஜகவை பகைத்துக்கொண்டோமோ என்று நிம்மதி இல்லாமல் அமர்ந்து புலம்புகிறாராம் ஸ்டாலின்.
©TNNEWS24

……………

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...