தாய் மதம் திரும்பிய பாலாஜி வேதனை !

கஞ்சமலை

சின்னத்திரை நடிகர் பாலாஜி நகைசுவை கதாபாத்திரங்களில் சினிமாவில் சினிமாவில் நடித்து வந்தார் அதன்பிறகு தனக்கென தனி அடையாளங்கள் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு நடித்துவருகிறார்.

நடிகர் பாலாஜியின் குடும்பத்தில் நடந்த இன்னல்கள் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றது பிறகு இருவரும் இணைந்து பிக் பாஸ் தொடரில் பங்கேற்றது என அனைவரும் அறிந்ததே.

ஆனால் பலருக்கு தெரியாத தகவல்களை பாலாஜி மக்களுக்கு சொல்லி இருக்கிறார் அதில் நானும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மதமாற்ற பட்டேன் என்றும் அதனால் பல வகையில் துன்பங்களை அனுபவித்தாகவும்.

சொந்த பந்தங்களுடன் விசேஷம் அன்று கோவிலுக்கு செல்லமுடியாது, குலசாமி கோவிலுக்கு சென்று ஊர் காரர்களுடன் இணைந்து சாமி கும்பிட முடியாது மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய வரலாறு கலாச்சாரத்தை இழந்து அடிமைபோல் வாழவேண்டும் என்று வேதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க:  சமரச முயற்சி தோல்வி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார் கண்ணப்பன்?

தற்போது தாய் மதம் திரும்பி இருப்பதால் அனைத்தையும் மீண்டும் பெற்றிருப்பதாகவும் உலகில் இதைவிட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை என்று நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

மதம் மாறுவது எவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் வாழ்வில் ஏற்படுத்துகிறது என்பதற்கு பாலாஜி ஒரு உதாரணம்.

©TNNEWS24

Loading...