திருவள்ளுவர் அடையாளத்தை அழித்ததுபோல் ஔவையார் அடையாளத்தை அழிக்க துடிக்கும் வைரமுத்து

திருவள்ளுவர் அடையாளத்தை அழித்ததுபோல் ஔவையார் அடையாளத்தை அழிக்க துடிக்கும் வைரமுத்து

By SSR

வெற்றி தமிழர் பேரவை என்ற இயக்கம் தமிழாற்றுப்படை அவ்வையார் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த நிகழ்ச்சி சனிக்கிழமை
( 09 .02 .2019 ) அன்று சென்னை பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் முக்கிய சிறப்பு விருந்தினராக வைரமுத்து கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்

இவ்விழாவிற்கு என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையை கிளம்பியுள்ளன.

ஔவையார் எப்போதுமே நெற்றியில் திருநீறுடன் இருப்பார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இவர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் பேனரில் ஔவையார் நெற்றியில் திருநீர் இல்லாமல் இருப்பது போன்று வடிவைத்துள்ளனர்.

இதையும் படிக்க:  ஒரு ரூபாய் செலவில்லாமல் பலகோடியை சுருட்டிய பிரியங்கா காந்தி சிக்கினார் ஒருத்தனும் யோக்கியம் இல்லை சுப்ரமணியசாமி அதிரடி.

திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலில் திருவள்ளுவரின் நெற்றியில் உள்ள திருநீர் மற்றும் ருத்ராட்சத்தை அகற்றி இந்து மத அடையாளத்தை அகற்றினர்.

பின்னர் சீமான் மூலம் முருகனின் இந்து மத அடையாளத்தை அழிக்க முயன்றனர்.

தற்போது ஔவையாரிடம் இருந்து இந்து மத அடையாளத்தை அழிக்க முயல்கின்றனர் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து யேசுவுடன் ஔவையாரை ஒப்பிட்டு சொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டாள் குறித்து தவறான தகவல்களை சொல்லி அவமானப்படுத்திய வைரமுத்து தற்போது ஔவையாரின் அடையாளத்தை அழிக்க துடிப்பதாக இந்து அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

©TNNEWS24

……………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க FacebookTwitter

இதையும் படிக்க:  ராகுல்காந்தி நேரு  பரம்பரையை  சார்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை சுஷ்மா சுவராஜ் பதிலடி!
Loading...