தேசத்துரோக வழக்கு தலைமறைவான சீமான்..

தேசத்துரோக வழக்கு தலைமறைவான சீமான்.. சுட்டு பிடிக்க வலியுறுத்தும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர்

சென்னை

நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேச துரோக வழக்கில் விரைவில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

இந்திய நாட்டின் ஒருமைப்பாடு குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தொடர்ந்து பொய்யான தகவல்களை பேசிவந்ததாலும் பாகிஸ்தான் குறித்து புகழ்ந்து இந்தியாவினை தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வந்தவர் சீமான்.

தொடர்ந்து சீமான் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விடீயோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகவே பலரும் சீமானை தேச துரோக வழக்கில் கைது செய்யக்கோரி காவல்துறைக்கு அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை அளித்து ஆன்லைன் மூலமாக வழக்கும் பதிந்தனர்.

இதையும் படிக்க:  பாஜக வெற்றிப்பெற்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன் சீமான் சவால் !

“ARMY FRIENDS TAMILNADU” என்ற அமைப்பின் சார்பில் தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி புகார் அளிக்கும் பிரிவில் மட்டும் சீமான் மீது 36 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, மேலும் பலர் தங்கள் சொந்தமாக சீமானை கைது செய்யவேண்டும் என்று சுமார் 200 – க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யபட்டுள்ளன.

ஆனால் இதுவரை தமிழக காவல்துறை சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆளுநர் மாளிகையின் அதிகார பூர்வ இணையதளத்தில் புகார் அளித்தனர். மேலும் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த தன்னார்வலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கில் சீமானை கைது செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு வருகிற 8 – ம் தேதி விசாரணைக்கு வருகிறது சீமான் பேசிய வீடியோ ஆதாரங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தகவல்கள் அனைத்து ஆதாரங்களும் கைவசம் இருப்பதால் நிச்சயம் சீமான் மீது வழக்கு பதிய நீதிமன்றம் அறிவுறுத்தும் என்றே சட்டவல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படிக்க:  இந்திய ராணுவம் குறித்து தவறாக பேசிவிட்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதா சீமான் விரட்டி அடிப்பு !

இதனை அறிந்த சீமான் கடந்த சில நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவருவதாகவும், மேலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் சென்னை கிண்டி ராணுவ குடியிருப்பை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் சீமானை கைது செய்வதோடு நில்லாமல் அவருக்கு கிடைக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்றும், தொடர்ந்து சீமான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தால் காவல்துறை அவரை சுட்டு பிடிக்கவும் தயங்க கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...