நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வரும் 19 -ஆம் தேதி வேற்பு மனு தாக்கல் துவங்குகிறது , இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

சில நாட்களுக்கு முன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

கடந்த தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டது.

மீண்டும் இந்த தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்த நிலையில் அதை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதையும் படிக்க:  காங்கிரஸ் கட்சியாலும் ராகுல் காந்தியால் நெருங்க முடியாத இடத்தில் பாஜக மற்றும் மோடி !

இந்த நிலையில் இன்று கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Loading...