நேரடியாக அமித்ஷாவுடன் கூட்டணி பேசும் தேமுதிக

இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது , அதிமுக பாஜக கூட்டணியும் ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில் ,தேமுதிக யாருடன் கூட்டணி என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் , அவரது மனைவி பிரேமலதாவும் அமெரிக்காவில் விஜயகாந்துடன் உள்ளதால் கட்சி பொறுப்பை துணை செயலாளர் எல்.கே சுதீஷ் கவனிக்கிறார்.

அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் எல்.கே சுதீஷ் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தேமுதிக கூட்டணி முயற்சியில் தீவிரமாக உள்ளது.

இதையும் படிக்க:  பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்கிய இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலை சந்தித்தோம் , அதனால் எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உள்ளது , மீண்டும் அந்த கூட்டணியில் இணைந்தாலும் எங்களுக்கு சந்தோசம் தான் என்று கூறியுள்ளார் சுதீஷ்.

மேலும் கேப்டன் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் , இந்த மாத இறுதிக்குள் அவர் தமிழகம் திரும்புவார் என்றும் எல்.கே சுதீஷ் கூறினார்.

……………………

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...