பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன் மோடி குறித்தும் பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் என்ன பதிவு செய்துள்ளான் தெரியுமா?

பழனி

12 வயதான சிறுமியை தாயின் இரண்டாவது கணவன் கர்ப்பமாக்கிய கலாச்சார சீரழிவு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகேயுள்ள பெத்தநாயக்கன் கிராமத்தை சேர்ந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தொடர்ந்து உடல் சோர்வு ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த நிலையில், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்

உடனடியாக இதுகுறித்து பழனி சார் ஆட்சியருக்கு பழனி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டது .

இந்த புகாரை பெற்ற சார் ஆட்சியர் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உடனடியாக உத்தரவிட்டார் .
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தாய் மாரியம்மாளின் இரண்டாவது கணவனான காமராஜன் என்பவன்தான் இந்த சீரழிவு செயலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதையும் படிக்க:  எந்த செய்தி சானல்களை தமிழர்கள் விரும்பி பார்க்கிறார்கள் எந்த செய்தி சானல்களை வெறுக்கிறார்கள் தெரியுமா ? BARC புள்ளி விவரம் சொல்வது என்ன ?

அவன் நீண்ட நாட்களாக சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளான் எனக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பழனி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், அந்தக் கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

சம்பவம் இப்படி இருக்க காமராஜ் தனது முகநூல் பக்கத்தில் சமுதாய சீர் திருத்தவாதிபோல் செயல்பட்டு மக்களை ஏமாற்றியுள்ளான், கடைசியாக நடந்த பொள்ளாச்சி பெண் பாலியல் குற்றவாளியை தூக்கில் போடவேண்டும் என கவிஞர் பா விஜய் பேசிய விடியோவை ஷேர் செய்துள்ளான்.

மேலும் மோடி சென்னை வந்தபோது தமிழகத்தின் வளங்களை கொள்ளையடித்த கார்ப்பரேட் மோடியே திரும்பி போ என்ற வசனத்தையும் பதிவு செய்துள்ளான்.

Original source – PUTHIYATHALAIMURAI, SATHYAM TV, social media.

இதையும் படிக்க:  குடும்ப பெண்களே ஒதுங்கி கொள்ளுங்கள் டிக் டாக் மூலம் படு பயங்கரமாக நடைபெறும் விபசாரம் !

©TNNEWS24

Loading...