பழிவாங்க நினைத்த திமுகவிற்கு பாமக வைத்த ஆப்பு !

பழிவாங்க நினைத்த திமுகவிற்கு பாமக வைத்த ஆப்பு !

விழுப்புரம்

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி குரு மறைவை தொடர்ந்து அவரது மரணம் தொடர்பாக பல்வேறு உறுதிப்படுத்தாத தகவல்கள் வந்தவண்ணமே இருந்தன.

குரு அவர்களின் மரணத்தை வைத்து எப்படியாவது பாமக கட்சிக்குள்ளும் அன்புமணிக்கு எதிராகவும் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்களை திசை திருப்பிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் முயன்று வருகின்றனர்.

அதன் வெளிப்பாடுதான் வேல்முருகனை வைத்து காடுவெட்டி குரு அவர்களின் மருத்துவ சிகிச்சை தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என சொன்னது, சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வதந்திகள் பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் பின்னணியில் திமுகவை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக பலரும் கருதிய நிலையில் வேல்முருகன் திமுகவுடன் காட்டும் நெருக்கம், திருமாவளவன் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமகவை விமர்சனம் செய்தது போன்ற நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்தின.

இதையும் படிக்க:  தமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி பாஜக,பாமக,தேமுதிக கூட்டணியில் இணைத்தனர்

அன்புமணி எங்கு தவிர்க்க முடியாத தலைவராக மாறிவிடுவாரோ அல்லது பாஜக, அதிமுகவுடன் இணைந்து அதிகாரத்திற்கு வந்துவிட்டால் எப்படியும் மத்திய அமைச்சர் பொறுப்பினை பெற்று வலுவடைந்துவிடுவார் என்ற எண்ணத்தில் திமுக தலைமை எப்படியாவது பாமகவை வீழ்த்தவேண்டும் பாஜகவுடன் பாமக கூட்டு சேருவதை தடுத்துவிடவேண்டும் என்று திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறது.

பாமக வைத்த ஆப்பு.

திமுகவின் திட்டத்தை அறிந்துகொண்ட பாமக திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் சத்தமே இல்லாமல் இறங்கியுள்ளது நடிகர் சந்தானத்தை வைத்தே திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே அதிரடியாய் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது, சந்தானத்தை வருகின்ற தேர்தலில் பாமகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தேவையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிக்க:  தமிழக நெட்டிசன்களுக்கு பயந்து பயணத்திட்டத்தை மறைத்த ராகுல்காந்தி!

தற்போது திரைப்படங்களில் நாயகனாக மட்டுமே சந்தானம் நடிப்பதால் அவருக்கு தேவையான நேரமும் இருப்பதால் அவரும் இந்த முறை பாமகவை ஆதரித்து செயல்பட திட்டமிட்டுள்ளார். உதயநிதியின் நெருங்கிய நண்பரான சந்தானத்தை வைத்தே தங்களை அரசியலில் ஓரம்கட்ட எண்ணிய திமுகவிற்கு பாமக சரியான பதிலடியை கொடுத்துள்ளது.

சந்தானம் தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான முகம் என்பதால் தங்கள் தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பதியும் என்ற பாமகவின் முடிவு சரியானதாகவே தோன்றுகிறது.

Loading...