பாஜக சார்பில் களமிறங்கும் தோனி கடைசி இரண்டு போட்டிகளை தவிர்த்தது இதற்காகத்தானா உற்சாகத்தில் பாஜவினர் !

பாஜக சார்பில் களமிறங்கும் தோனி கடைசி இரண்டு போட்டிகளை தவிர்த்தது இதற்காகத்தானா உற்சாகத்தில் பாஜவினர் !

ராஞ்சி

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது இன்னும் சரியா தமிழகத்தில் தேர்தல் வாக்கு பதிவிற்கு 1 மாத காலங்களே உள்ளன. இந்த சூழலில் பாஜக தனது அணியில் இடம்பெறும் நட்சத்திர வேட்பாளர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் கெளதம் காம்பிர் டெல்லி தொகுதியில் போட்டியிடுவதாகவும், ரவீந்திர ஜடேஜா மனைவி ராஜஸ்தானிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்த செய்தி தொடர்பாளர் விரைவில் இந்திய அணியின் தலை பாஜகவில் இணைவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லி ஆச்சர்யத்தை எகிற வைத்திருக்கிறார்.

இந்திய அணியில் தலை என செல்லமாக அழைக்கப்படுபவர் தோனி மட்டுமே, எனவே தோணி விரைவில் பாஜக சார்பில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜகவினர் இப்போதே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர், ஆனால் தோனி இதுவரை இந்த செய்திக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க:  மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய தல தோனி

மேலும் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடாமல் ஓய்வு கேட்டது இதற்காகத்தான் என பல தகவல்கள் நேற்று முதல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

ஆனால் மற்றொரு தரப்பினரோ மேற்குவங்கத்தில் கங்குலி களம் இறங்குவதைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்கலாம் என்றும் பேசி வருகின்றனர். எது எப்படியோ தோணியோ, கங்குலியோ இருவரில் யார் இணைந்தாலும் நிச்சயம் அது பாஜகவிற்கு ஆதரவாகத்தான் பார்க்கப்படுகிறது.

சென்றமுறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் டிஷர்ட் அணிந்தவர்களை தாக்கிய போது அதற்கு எதிராக தோனி தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...