பாண்டேவை பார்த்து அள்ளுவிடும் திமுக.. கல்லூரிகளில் பேச தடை

பாண்டேவை கல்லூரிகளுக்குள் பேச அனுமதித்தால் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் ஏன் இந்த பயம் பாண்டேவை பார்த்து?

சென்னை

தமிழகத்தை சேர்ந்த தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே நடத்திய விவாதங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகர் பெயர்கள் எப்படி மக்களுக்கு அதிகம் அறிமுகமானதோ அதுபோல் ரங்கராஜ் பாண்டே பெயரும் மக்களுக்கு நன்கு பரிட்சயமானது இந்நிலையில் தான் பிரபல தொலைக்காட்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவிப்பினை சமூக வலைத்தளங்களின் மூலமாக வெளியிட்டு வெளியேறினார் பாண்டே.

அன்று முதல் தமிழகத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் பற்றி youtube சேனலின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஏன் தந்தி டிவி -ல் இருந்து பாண்டே வெளியேறினார் நிர்வாகத்துடன் மனக்கசப்பா அல்லது வேறு ஏதேனும் நிர்வாக சிக்கல்களா இல்லை அரசியல் அழுத்தங்களா என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் தினமும் எழுந்த வண்ணம் உள்ளன அதற்கு இன்று வரை பதில் இல்லை.

இதையும் படிக்க:  இராமநாதபுரம் சீமையில் பறக்கபோவது காவி கொடியா? பச்சைகொடியா? களநிலவரம் என்ன?

ஆனால் தற்போது ரங்கராஜ் பாண்டே நீக்கத்தின் பின்னணியில் திமுக இருக்கலாம் என்றும் மேலும் பாண்டே தலைமை செய்தியாளராக இருக்கும் வரை அந்த தொலைக்காட்சியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது கூட்டணி இயக்கங்களோ பங்கு பெற மாட்டார்கள் மேலும் எந்த விளம்பரமும் தரமுடியாது என்று நேரடியாக தெரிவித்துவிட்டார்களாம்.

இதற்கு காரணம் R. K நகர் இடைதேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக வெளியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே அதை பாண்டே மறுத்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்கிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இதனை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரிஸ்ட்கள்தான் சிந்தனையாளர்கள் அறிவாளிகள் என்று பிம்பத்தை உருவாகியிருந்தவர்களுக்கு பாண்டே வீரமணி, சுபவீ மற்றும் பலருடன் நடத்திய விவாதங்கள் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டியது.

இதையும் படிக்க:  புல்வாமா தாக்குதலில் பிரிவினைவாதி யாசின் மாலிக் தொடர்பு இருப்பதாக பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது விரைவில் சீமானும் கைதாக வாய்ப்பு?

வீரமணியுடன் நடத்திய விவாதங்களில் ஏன் நீங்கள் இந்து மதத்தின் கடவுள்களை மட்டும் இல்லை என்கிறீர்கள் ஏன் மற்ற மத கடவுள்களை பற்றி பேச மறுக்கிறீர்கள் என்ற கேள்விதான் வீரமணியை அரசியல் செல்வாக்கில் இருந்தே ஓரம் கட்டியது.

இதற்கெல்லாம் பாண்டே மீது கடும் கோபத்தில் இருந்த திராவிட அமைப்புகள் தக்க நேரம் பார்த்து பாண்டேவை கவுக்க குழி தோண்டியுள்ளனர்.

எனவே பாண்டே தானாக தொலைக்காட்சி தலைமை செய்தியாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் தன் பங்கிற்கு தனது பணியை செய்துகொண்டுதான் உள்ளார்.
கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் மக்கள் இடையே தனது கருத்துக்களை வெளிப்படையாக எடுத்து வைத்து வருகிறார்.

இதையும் படிக்க:  இந்த வார்த்தைக்குதான் இவ்ளோ பெரிய சண்டையா ஜடேஜா- இஷாந்த் சர்மா!

இதனால் பாண்டே மீது மீண்டும் கோபமடைந்த சில கட்சிகள் அவரை தற்போது எந்த கல்லூரியிலும் பேச அனுமதிக்க கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்கள் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர்.

பாண்டே என்ற ஒற்றை மனிதனை பார்த்து இந்த தலைவர்கள் இப்படி பயப்படுவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை ஆனால் பாண்டே என்ற மனிதனுக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் ஆதரவு இருக்கும் என்றே நம்புவோம்.

©TNNEWS24

Loading...