பாண்டே தொடங்கியுள்ள சாணக்கியா சேனலில் முதல் விவாதம் இதுதான் தமிழகம் முழுக்க குவிந்த கவனம்?

சென்னை

மூத்த பத்திரிகையாளர் பாண்டே இன்று சாணக்கிய என்ற புது சேனலை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் புது முயற்சியாக தனது அனைத்து விவாதங்களையும் அனைத்து சமூகவலைத்தளங்களில் நேரலை செய்யும் புது யுத்தியை தொடங்கி இருக்கிறார்.

கம்யூனிச, பெரியாரிய சிந்தனை நிறைந்தவர்கள் அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் தான் தொடங்கும் புது சேனலில் நெற்றியில் திலகமிட்டு தனது முதல் பிரதியை வெளிப்படுத்தி இருக்கிறார் பாண்டே.

மேலும் தான் எந்த தலைப்பில் விவாதம் நடத்தவேண்டும் என்று கருத்தினையும் மக்கள் மத்தியில் பாண்டே கேட்கவுள்ளார், குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் தேர்வு செய்யும் கேள்விகளையே பாண்டே விவாதமாக நடத்தவுள்ளார், அந்த வகையில் இந்த முறை மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளரை பற்றியதாக இருக்கவேண்டும் என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  நடிகர் அஜித் குமார் வகித்து வந்த ஆலோசகர் பதவி நிறைவு!

குறிப்பாக மதுரையில் களம்காணும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனது நாவலில் பெண்கள் சீவி சிங்காரிச்சி கோவிலுக்கு செல்வதே பூசாரியை பார்க்கத்தான் என கொச்சை படுத்தும் விதமாக எழுதியிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

முதலில் மதுரை திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் வேட்பாளரை அழைத்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது பாண்டேவின் முதல் விவாதத்தை காண அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்து கவனித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...