பாதிக்கப்பட்ட பெண்ணின் மானத்தை அட்டை படத்தில் போட்டு பணமாக மாற்ற துடிக்கும் நக்கீரன் .. இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணை காக்கும் லட்சணமா?

பாதிக்கப்பட்ட பெண்ணின் மானத்தை அட்டை படத்தில் போட்டு பணமாக மாற்ற துடிக்கும் நக்கீரன் .. இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணை காக்கும் லட்சணமா?

சென்னை

பொள்ளாச்சி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருகிறதோ இல்லையோ ஊடகங்களுக்கு வருவாயை உயர்த்தி வருகிறது.

திருமணமாகாத இளம்பெண்ணின் விடியோவை வெளியிட்டது மட்டுமல்லாமல் அவளது மார்பிங் செய்த புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு காசாக்க நினைத்த பரிதாபம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வரை சென்று காலெக்ட்டர் அலுவலகத்தில் மனுகொடுத்த நிலையிலும், இதுபோன்ற சில ஊடகங்கள் ஏன் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றன என பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

ஒரு சிலரோ இது தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு நடந்திருந்தால் இப்படித்தான் அட்டைப்படத்தில் போட்டு வியாபாரம் செய்வீர்களா? இதுதான் உங்கள் ஊடக தர்மமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிக்க:  வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்து சொன்ன மல்லையா ! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வாழ்த்து !

தமிழகத்தை சேர்ந்த சில தொலைக்காட்சிகள் பெண்ணின் புகைப்படத்தையோ அல்லது அதுசம்பந்தமான எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிட மாட்டோம் என்று சொல்லிய நிலையில் இப்படி ஒரு அலங்கோலம் சில பத்திரிகைகள் செய்வது அவர்களின் தரத்தை அவர்களே குறைத்து கொண்டதாகத்தான் பார்க்க படுகிறது.

பலர் பெண்ணின் விடியோவை வெளியிட்டதால்தான் நியாயம் கிடைக்கிறது என்று சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் ஆனால் இந்தியாவையே உலுக்கிய டெல்லி நிர்பயா புகைப்படத்தை யாராவது பார்த்து இருக்கிறோமா உண்மையில் அவரது பெயரே நிர்பயா இல்லை இதுபோல் ஊடகங்கள் தங்களுக்கு உள்ள மரியாதையை தாங்களே காப்பாற்ற வேண்டும்.

பணத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மனநல ஆலேசாகர் ஷிவானி தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  நான் வாங்கும் சம்பளமே எனக்கு போதும் போராட்டத்திற்கு அழைத்தவர்களை விரட்டி அடித்த ஆசிரியை

©TNNEWS24

Loading...