பொள்ளாச்சியில் பலாத்காரத்திற்கு எதிராக போராட்டம் வால்பாறையில் சிறுமி கற்பழிப்பு சிக்கும் திமுக பிரமுகர் மகன்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் ‘காக்கா ரவி’ என்ற ரவிச்சந்திரன் இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.

அவரது மகன் கவின் வயது 16 பள்ளியில் 12 வகுப்பு படித்துவருகிறான் , அவன் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துவந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் , சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர் இறுதியில் அந்த சிறுமி கவின் வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர்.

உடனே அந்த சிறுமியை மீட்ட பெற்றோர் என்ன நடந்தது என சிறுமியிடம் கேட்டனர் அதற்கு அந்த சிறுமி கவின் தன்னை ஏமாற்றி அழைத்துவந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,

இதையும் படிக்க:  நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

அதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி அழுத்துள்ளாள் , அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கவின் பாலியல் பலாத்காரம் செய்ததில் படுகாயமடைந்துள்ள அந்த சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்…,

சிறுமியின் பெற்றோர் முதலில் புகாரளித்த போது அதை ஏற்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர் காரணம் திமுகவின் சில முக்கிய பொறுப்பாளர்கள் காவல் துறையினரிடம் பேரம் பேசியுள்ளனர் என்று பெற்றோர் தெரிவித்தனர்..,

ஆனால் அதற்குகுள் இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானதால் தான் வேறு வழியின்றி புகாரை ஏற்றுள்ளனர் இப்போது கவின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

இதையும் படிக்க:  கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !

பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் பாலியல் குற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் வேலையில் அதே திமுகவின் பிரமுகர் மகன் சிறுமியை வன்புணர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..,

முதலில் உங்கள் கட்சியினரின் குற்றத்தை கண்டித்து போராடுங்கள் பிறகு பார்க்கலாம் என கனிமொழி உட்பட திமுகவினருக்கு பலரும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவிப்பாரா இல்லை பொள்ளாச்சி விவகாரத்தில் அமைதியவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...