போட்டியிட்ட 90 % தேர்தல்களில் நோட்டாவிற்கு கீழ் ஓட்டுகள் வாங்கியதால் நாம் தமிழர் கட்சிக்கு ரெட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க மறுப்பு !

போட்டியிட்ட 90 % தேர்தல்களில் நோட்டாவிற்கு கீழ் ஓட்டுகள் வாங்கியதால் நாம் தமிழர் கட்சிக்கு ரெட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க மறுப்பு !

டெல்லி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் மட்டுமே நிரந்தர சின்னத்தை கொண்டுள்ளன, பாமக இந்த தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை பெரும் பட்சத்தில் தன்னுடைய மாம்பலம் சின்னத்தை தக்கவைத்து கொள்ளும்.

ஏற்கனவே மதிமுகவின் பம்பரம் சின்னமும், விடுதலை சிறுத்தைகளுக்கான மோதிரம் சின்னத்தையும் ஒதுக்க மறுத்துவிட்டது, இந்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

இதையும் படிக்க:  நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது மேலும் 90 % போட்டியிட்ட தொகுதிகளில் நோட்டாவிற்கு கீழே வாக்குகளை பெற்றதால் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அதன் சின்னமான ரெட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்க தேர்தலில் ஆணையம் மறுத்துவிட்டது.

சில நாட்களுக்கு முன்னர் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காத தேர்தல் ஆணையத்தை சீமான் கலாய்த்து செய்தியாளர்கள் முன்பு கிண்டல் செய்திருந்தார் ஆனால் தற்போது அவருக்கே சின்னத்தை ஒதுக்க வில்லை அதோடு அதற்கான காரணமாக 100% டெபாசிட்டை இழந்த கட்சி என்று அடையாளத்தையும் கொடுத்துள்ளது.

இந்த செய்தி வெளியானது முதல் நாம் தமிழர் கட்சியினரை சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  சீமானிடம் பணத்தை கொடுத்து எண்ணைபோல் ஏமாறாதீர்கள் ஜெர்மனியில் வேலையை விட்டுவிட்டு வந்த கோபி புலம்பல்.
©TNNEWS24

Loading...