மகன்களுக்கே பொறுப்பு கொடுத்தால் நாங்கள் எங்கு போவது கிராமசபை கூட்டத்தில் திமுக முன்னாள் எம்.பியை அடித்த திமுக தொண்டர்

வேலூர்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் இன்று திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் முன்னாள் எம்.பி சுகவனம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் பங்கேற்ற கோபி என்ற திமுக தொண்டர் எழுந்து இதுவரை எங்களுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் , எங்கள் பகுதியில் ஒரு சாலை கூட சரியாக இல்லை.

நான் பல ஆண்டுகளாக கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன் ஆனால் எனக்கு இதுவரை கட்சி சார்பில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

ஆனால் நேற்று கட்சியில் சேர்ந்த உங்கள் மகனுக்கு எம்பி சீட் கேட்கின்றீர்கள் , கட்சிக்காக எந்த ஒரு பணியும் இன்று வரை செய்யாத உங்கள் தங்கை மகனுக்கு கட்சி பொறுப்பு பெற்றுத்தந்துளீர்கள்

இதையும் படிக்க:  இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்!

நமது கட்சி தலைமையை போலவே நீங்களும் இப்படி உங்கள் உறவினர்களுக்கு மட்டும் பொறுப்பும் , பதவியும் கொடுத்தால் கட்சிக்காக இரவு பகலாக கடுமையாக உழைக்கும் எங்களை போன்ற தொண்டர்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் கோவமடைந்த சுகவனம் கோபியை திட்டியுள்ளார் அதனால் ஆத்திரமடைந்த கோபி , சுகவனத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதை பார்த்த மற்ற திமுகவினர் கோபியை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்தனர் , அதில் படுகாயமடைந்த கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கிராமசபை கூட்டம் தற்போது திமுகவிற்கு எதிராகவே திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...