மதிமுகவினரால் தாக்கப்பட்ட சசிகலா கதிரேசனை நேரில் சந்தித்த H.ராஜா , தமிழிசை சௌந்தர்ராஜன்

By : SSR
நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்தார். அதனால் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த சசிகலா கதிரேசன் என்னும் 24 வயது பெண் அந்த கூட்டத்திற்குள் புகுந்து “பாரத் மாத்தா கி ஜெய்” என்று கோசம் எழுப்பினார்.

இதனால் அங்கிருந்த மதிமுகவினர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கினர். அதில் காயமடைந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தகவலை அறிந்த பாஜக தலைவர்கள் பலர் அப்போதே போன் மூலம் நலம் விசாரித்த நிலையில் நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையும் படிக்க:  புரளியை கிளப்பிய தமிழக ஊடகங்கள் என்னது நான் மதம் மாறிட்டேனா குறளரசன் விளக்கம்

அதன் பின்னர் அங்கு வந்த பாஜக தேசிய செயலாளர் H .ராஜா சசிகலா கதிரேசனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
©TNNEWS24

……………………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...