முடிந்தால் என்னை பிடித்து பார் ..! தொடர்கதை பகுதி:1

  நமது TNNEWS24 இணையதள ஊடகத்தில் கிரைம் திரில்லர் தொடர்கதை ஒன்று தினமும் வெளியாகவுள்ளது

  இந்த கதை ஒரு உண்மை கதையின் மூலம் தூண்டப்பட்டு எழுதப்பட்டது.

  1990 – இத்தாலி சிறைச்சாலை 

  நான் ஜெயசங்கர் CBI , நான் இந்தியன் எம்பசி சார்பா இங்க வந்துருக்க , இந்த சிறைல அடைக்கப்பட்டிருக்கற ஆரோன் ரங்கராஜன் என்கிற இந்திய நாட்டை சேர்ந்த கைதியை நான் பாக்கணும் என்கிட்ட அதுக்கான ஆர்டர் இருக்கு 

  “சரி சார் என்னை பாலோ பண்ணி வாங்க “

  எப்படி இருக்க ஆரோன்..

  ஜே சார் நீங்களா …..!

  ஆமா ஆரோன் உன்ன இங்க இருந்து காப்பாத்தி இந்தியா கொண்டுபோக தான் நா இங்க வந்துருக்க 

  ” ஆரோன் தனது பழையகாலத்தை நினைத்து பார்க்கிறான் ( flash  back ) “

  1983  – சென்னை 

  “லயன்ஸ் கிளப் விருது வழங்கும் விழா “

  இந்த கிளப் துவங்கப்பட்டு பல்லாண்டுகள் கடந்துவிட்டது இதில் இதுவரை பலருக்கு விருது வழங்கியுள்ளோம் , இந்த ஆண்டிற்கான லயன்ஸ் விருதை பெறுபவர் தொழிலதிபர் மோகன சுந்தரம் 

  நன்றி நன்றி இந்த விருதை வாங்குவது எனக்கு ரொம்ப பெருமையை இருக்கு நா உங்க எல்லாருக்கும் சொல்ரது ஒன்னு தான் முயற்சியை மட்டும் கைவிட்றாதீங்க என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையா இருப்பது என்னுடைய மனைவி மேரி மெக்டொளின் மற்றும் என்னுடைய மகன் ஆரோன் ரங்கராஜ் 

  ” நமது கதையின் ஹீரோ ஆரோன் ரங்கராஜ் , அவரது அப்பா மோகன சுந்தரம் ஒரு தொழிலதிபர் , அம்மா மேரி மெக்டொளின் ஒரு இத்தாலிய பெண் , சுந்தரம் தொழில் நிமித்தமாக இத்தாலி சென்றபோது மேரியை பார்த்து காதலித்து திருமணம் செய்துகொண்டார் “

  “செல்வ செழிப்புடன்  ஆரோனின் வாழ்க்கை சந்தோசமாக சென்றுகொண்டிருந்தது அந்த நாள் வரை , அந்த நாள் என்ன ஆனது …….! “

                           தொடரும் 

  இந்த கதையின் தொடர்ச்சி நாளை வெளியாகும் 

  ©TNNEWS24

  Loading...