முதலில் நீட் தேர்வுக்கு விட்ட சவாலுக்கு எப்போ சாவ சொல்லு…. சவால் விட்டு நிர்மலாவிடம் நேரலையில் அசிங்கப்பட்ட பிரசன்னா !

முதலில் நீட் தேர்வுக்கு விட்ட சவாலுக்கு எப்போ சாவ சொல்லு…. சவால் விட்டு நிர்மலாவிடம் நேரலையில் அசிங்கப்பட்ட பிரசன்னா !

சென்னை

தனியார் தொலைக்காட்சியில் அதிமுக வலுவான கூட்டணியை அமைகிறதா என்ற கேள்வியுடன் விவாதம் நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பில் நிர்மலா பெரியசாமி திமுக சார்பில் பிரசன்னா, அமமுக சார்பில் புகழேந்தி, பத்திரிகையாளர் மணி, கமல் கட்சி சார்பில் இயக்குனர் ராசி அழகப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமே விறு விறுப்பாக நடந்தது அதிமுக சார்பில் பேசிய நிர்மலா நாங்கள் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ‘ என்று பேசமாட்டோம் என்று ஸ்டாலினை கலாய்த்த படி இருந்தார் இது ப்ரசன்னாவிற்கு சற்று கோபத்தை ஏற்படுத்த அமைதியாக இருந்தார்.

இதையும் படிக்க:  பாதிக்கப்பட்ட பெண்ணின் மானத்தை அட்டை படத்தில் போட்டு பணமாக மாற்ற துடிக்கும் நக்கீரன் .. இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணை காக்கும் லட்சணமா?

நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியபோது அதிமுக அமைக்கும் கூட்டணியில் வாக்கு வங்கியே இல்லை நிச்சயம் நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவோம். மேலும் எங்கள் கட்சியில் கூட்டணி ஜனநாயகம் உள்ளது.

ஆனால் அதிமுகவில் அப்படி அல்ல பாஜக அதிமுக கழுத்தை பிடித்து தனக்கு தேவையான தொகுதிகளை பெரும் என்றார் இதில் குறுக்கிட்ட நிர்மலா பாஜக எங்கள் கழுத்தை பிடித்ததை தம்பி பிரசன்னா பாத்தாரா என்ற கேள்வி எழுப்ப

நிச்சயம் நான் சவால் விடுகிறேன் பாஜக உங்கள் கழுத்தை பிடித்து 12 தொகுதிகள் வாங்கும் என்று சவால் விட்டார்.

அதற்கு நிர்மலா நீங்க ஏற்கனவே நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றால் செத்துவிடுவீர்கள் என்று சவால் விட்ட ஆளுதான் முதலில் அதை செய்யுங்கள் என்று சொன்னதும் ப்ரசன்னாவிற்கு மூஞ்சி செத்து போய் விட்டது.

இதையும் படிக்க:  மதக்கலவரத்தை தூண்டும் லயோலா கல்லூரி

கடைசியில் நா சொன்னது வேற நீட் இது வேற நீட் என்று சமாளிக்க முயன்றும் நிர்மலா பெரியசாமியிடம் அசிங்கபட்டார் பிரசன்னா.

சரி ட்விட்டரில் #எப்பசாவபிரசன்னா என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகாமல் இருந்தா சரி.

இனி பிரசன்னா சவால் விடுவதற்கு முன் ஒரு தடவைக்கு 10 தடவை யோசிக்கவும் இல்லை என்றால் இனி வரும் காலங்களில் இதுபோல் அவமானம் தான் மிஞ்சும் !

©TNNEWS24

Loading...