முதலுக்கே மோசமாய் போச்சு சந்திரபாபு நாயுடு பொலம்பல் !

ஆந்திர முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்வில் எதிர்பாராத அளவில் மாற்றங்கள் நிகழ போகிறது என்பதனை அவரே அறிந்திருக்க மாட்டார்.

பாஜக கூட்டணியில் இணைந்த நாயுடு வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்ததும் அதில் தனது கட்சியை சேர்ந்த 2 MP களுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார், சந்திரபாபு நாயுடு முக்கிய அமைச்சரவையை கேட்கவே பாஜக தனி பெரும்பான்மை பெற்றதால் அதனை மறுத்துவிட்டது இது சாத்திரபாபுவிற்கு சற்று நெருடலாகவே இருந்து வந்தது.

5 வருடம் பாஜகவுடன் ஒட்டி இருந்த நாயுடு தெலுங்கானா மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் அதோடு இல்லாமல் பாஜக விற்கும் மோடிக்கும் எதிராக தீவிரமாக தனது அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
இதையும் படிக்க:  தீவிரவாதிகளையும் வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகளுக்கு உதவும் அரசியல்வாதிகளையும் நெற்றியில் சுடவேண்டும்…வீரமரணம் அடைந்த நஷீர் அஹமத் மனைவி ஆவேசம்

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினையும், வடமாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பாஜகவிற்கு எதிராக அணிதிரட்டினார் இந்நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தெலுங்கானாவில் போட்டியிட போவதாக அறிவித்தார் இதனை அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை காரணம்
தெலுங்குதேசம் கட்சியானது காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.

முதலுக்கு மோசம்

5 மாநில சட்டப்பேரவை முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சந்திரபாபு நாயிடுவிற்கு வருத்தத்தையே தந்தது. தனது கட்சி தெலுங்கானாவில் கடந்த சட்டமன்றத்தில் பெற்ற வாக்குகளை காட்டிலும் படு மோசமாக தோல்வி கண்டது மாறாக சந்திரசேகர்ராவ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிக்க:  மேகதாதுவில் கர்நாடகாவை எடப்பாடி விரட்டி அடித்தது போல் அன்று காவிரி வழக்கில் கருணாநிதி விலை போகாமல் இருந்திருந்தால்!

தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எப்படியாவது சந்திரபாபுவை வீழ்த்தவேண்டும் என்று சந்திரசேகரராவ் முடிவெடுத்துள்ளார் எனவேதான் ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேச தனது மகனை நேற்று அனுப்பிவைத்திருக்கிறார்.

தற்போது தேவையில்லாமல் பாஜகவையும் மோடியையும் பகைத்துக்கொண்டோமோ என்று நாயுடு புலம்புகிறாராம் போத குறைக்கு அவர் செல்லும் இடமெல்லாம் பாஜகவினர் சாலை மறியல் கருப்பு கொடி காட்டுதல் போன்ற நிகழ்வுகளால் கடுமையான அப்செட்டில் உள்ளாராம் நாயுடு.

தேவைதான்.

©TNnews24

Loading...