முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் திணறிய செய்தியாளர்கள்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் , உங்களை எதிர்த்து சட்டசபையில் குரலெழுப்பிய தேமுதிகவுடன் எப்படி கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.

8 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை இப்போது கேட்கும் நீங்கள் , இதே கேள்வியை ஏன் ஸ்டாலினிடம் கேட்பதில்லை.

வைகோவை விட மோசமாக யாரும் திமுகவை விமர்சனம் செய்திருக்க முடியாது அந்த அளவிற்கு தரம் கெட்ட வார்த்தைகளை கொண்டு, தீவிரமாக திமுகவை விமர்சித்தவர் வைகோ.

ஆனால் இன்று அவர் ஸ்டாலினை மேடைக்கு மேடை புகழ்ந்து வருகிறார் , ஏன் எந்த செய்தியாளரும் அவர்களிடம் போய்,அன்று இப்படி கீழ்த்தரமாக விமர்சித்துவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளீர்களே ஏன் என்று ஸ்டாலினிடமோ அல்லது வைகோவிடமோ ஏன் எந்த கேள்வியும் கேட்டதில்லை.

இதையும் படிக்க:  முதல்வரின் சேலம் தொகுதி கைகூடுகிறதா? கைநழுவுகிறதா? வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு !

என்று முதல்வர் பழனிசாமி கேள்வியெழுப்பினார் , முதல்வரின் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர்கள் வாயடைத்து நின்றனர்.

©TNNEWS24

Loading...