மெர்சல் படத்தில் விஜய் ஏன் மோடியை எதிர்த்தார் இப்போ தெரியுதா ? திமுகவிற்கு போடுங்கள் எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி

மெர்சல் படத்தில் விஜய் ஏன் மோடியை எதிர்த்தார் இப்போ தெரியுதா ? திமுகவிற்கு போடுங்கள் எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி

நெல்லை

நடிகர் விஜயின் தந்தை தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்,

வழக்கமாக தான் செல்லும் பயண திட்டங்கள் குறித்து வெளியில் சொல்லாத சந்திரசேகர் இன்று தான் தனியார் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதாக செய்தியாளர்களுக்கு தனது உதவியாளர் மூலம் தகவல் அனுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் அதுகுறித்த அறிவிப்பு ஏதேனும் சந்திரசேகரிடம் இருந்து வரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றோம் , சரியாக மாலை 4. 50 மணி அளவில் ஆண்டுவிழாவில் பங்கேற்ற இயக்குனர் சந்திரசேகர் பொறியியல் மாணவர்களுக்கு தேவையான அறிவாற்றலை கல்லூரியினால் மட்டுமே தரமுடியாது சுற்றம், நட்பு மற்றும் சினிமா ஆகியவற்றால் தரமுடியும் எனவும்

இதையும் படிக்க:  கதிர் ஆனந்தின் தேர்தல் வாழ்கை முடிந்தது அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! திருப்பி தாக்கிய பிரசன்னா?

தனது மகன் நடித்த நண்பன் திரைப்படம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார், அதன்பின்பு 5.40 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சந்திரசேகர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களது நிலைப்பாடு என்னவென்று நிருபர் கேட்ட கேள்விக்கு அதுபற்றி தற்போது கருத்து கூற முடியாது என்றும் பாஜக ஆட்சியில் வருமான வரி சிபிஐ போன்ற அமைப்புகள் குறித்து விமர்சனம் வைத்தார்.

இறுதியில் ஓட்டுமொத்த தமிழர்களும் மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெளிவாக இருப்பதாகவும் தனது நிலைப்பாடும் அதுதான் என்றார்.

சந்திசேகரின் பேச்சு விஜய் ரசிகர்களை சூசகமாக திமுக வினை ஆதரிக்கும்படி வற்புறுத்துவது போல் தெரிகிறது ஏன் என்றால் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி குறித்து மேடையில் பேசும்போது எனது தந்தை மூலம் அதிமுகவிற்கு விஜய் ரசிகர்கள் வேலை செய்யவேண்டும் என்று சூசகமாக சொன்னேன் தற்போது அதிமுக வென்றுவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிக்க:  ஏன் ஸ்டாலின் இப்படி பதறிப்போயி பாமகவை விமர்ச்சிக்கிறார் தெரியுமா?

அதுபோல் இப்போது சந்திரசேகர் மோடிக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்திருப்பதன் மூலம் பாஜகவிற்கு எதிரணியில் உள்ள திமுகவினை ஆதரிக்கும்படி சொல்லாமல் சொல்வதாகவே தெரிகிறது.

வருமான வரியின் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதற்கு பழிவாங்க இந்த தேர்தலை விஜய் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறாரா அல்லது மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரி தொடர்பான ரைடுகள் மீண்டும் வரலாம் என்ற காரணத்தினால் காங்கிரஸிற்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்பது காரணம் தெளிவாக தெரியவில்லை

இதற்காகத்தான் மெர்சல் படத்தில் வேண்டுமென்றே GST குறித்தோ மத்திய அரசு குறித்தோ விஜய் விமர்சனம் செய்துவந்தாரா , திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை தற்போது கையில் எடுத்திருப்பதால் சர்கார் படத்தில் அதிமுகவினரை எதிர்த்தாரா என்றும் அரசியல் உள்நோக்கம் தான் விஜய் மோடிக்கு எதிராக செயல்பட காரணமா என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் கேள்வியை இப்போது விஜயை பார்த்து கேட்கின்றனர்.

இதையும் படிக்க:  இந்து மதமே இல்லை இது கிறிஸ்தவநாடு திமுக ஆதரவாளர் சற்குணம் திமிர் பேச்சு கண்டிக்க யாருமில்லையா?

©TNNEWS24

Loading...