மேடையில் வைத்து திருமாவளவனை அவமான படுத்திய சோனியா காந்தியுடன்தான் மீண்டும் கூட்டணியா?

2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ஈழ தமிழருக்கு ஆதரவாக இன அழிப்புக்கு எதிராக இயங்கிகொண்டிருப்பதாக தன்னை காட்டிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்திருந்தது.

விடுதலை சிறுத்தைகள் இந்த கூட்டணியில் இருந்து விடுபட வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து கொண்டிருக்க தொல் திருமாவளவன் திமுக காங்கிரஸ் கூட்டணியை இருப்பில் வைத்தார். அதோடு ஈழத்தமிழர் பக்கமும் நின்றார்.

சென்னையில் சோனியா காந்தி கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசிய போது கருணாநிதி தலைமையிலான முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சாதி வெறி சக்திகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அகில இந்திய உலகில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளது.

இதையும் படிக்க:  இந்திய மொழிகள் வேறு எதற்கும் கிடைக்காத சிறப்பு ஜனவரி மாதம் தமிழுக்கான மாதமாக அமெரிக்கா அறிவிப்பு…

ஒரு வாக்கை கூட சிந்தாமல் சிதறாமல் இஸ்லாமியர்கள் சிறுபான்மை கிருஸ்தவர்கள் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் அதற்கான தகுதி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. பாஜக ஆளும் போது பழங்குடியினர் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை பொறுத்த வரை இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சியால் மதசார்பற்ற அரசை நிறுவ தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று உரையாற்றிய திருமாவளவன் ஈழ தமிழர் விஷயத்தில் ஐநாவில் இலங்கை பிரச்னையை பற்றி பேசக்கூடாது என்று தடுத்தது சீன அரசு.

இதையும் படிக்க:  புரளியை கிளப்பிய தமிழக ஊடகங்கள் என்னது நான் மதம் மாறிட்டேனா குறளரசன் விளக்கம்

சோனியா காந்தி அம்மையாரிடம் நான் கெஞ்சி கேட்கிறேன்.இலங்கையில் வாழும் என் தமிழ் சொந்தங்களை காப்பாற்றுங்கள். போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். அது உங்களால் தான் முடியும் என்று கெஞ்சினார். அதே போல் அந்த கூட்டத்தில் சோனியா காந்தி திருமாவளவன் பெயரை கூட குறிப்பிடாமல் மிகப்பெரிய அவமானத்தை திருமாவளவனுக்கு உண்டாக்கினார். இதெல்லாம் அரங்கேறிய அதே நேரம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் செய்தி தமிழகத்தை பெரிதும் உலுக்கின. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் திமுக காங்கிரஸ் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

ஆனால் சோனியாகாந்தி தன்னை மேடையில் வைத்து அவமான படுத்தியதை கூட மறந்துவிட்டு மீண்டும் அதே சோனியாகாந்தியின் காங்கிரஸ் கூட்டணியில் இணைய திருமாவளவன் அடிபோடுவது தான் தன்மானமா?

இதையும் படிக்க:  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமுத்திரக்கனி அப்போ இவரை பத்தி வந்த செய்தி எல்லாம் உண்மைதானா?
Loading...