மோடிக்கு கருப்பு கொடி காட்ட வருகை தரும் வைகோவை யார் கவனிப்பது பாஜக இந்துமுன்னணி இடையே கடும் போட்டி !

மோடிக்கு கருப்பு கொடி காட்ட வருகை தரும் வைகோவை யார் கவனிப்பது பாஜக இந்துமுன்னணி இடையே கடும் போட்டி

திருப்பூர்.

இந்திய பிரதமர் மோடி வருகின்ற பிப்ரவரி 10 ம் தேதி தமிழகம் வருகிறார் மேலும் திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ள அரசுவிழாவின் மூலம் நலத்திட்ட உதவிகளை நாட்டிற்கு அர்பணித்துவிட்டு பின்னர் பாஜக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியை இந்து அமைப்புகளும் பாஜக தொண்டர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று அறிவித்துவிட்டார் சென்ற முறை பிரதமர் மதுரை வரும்போது மதிமுகவை சேர்ந்த 40 பேரை கையில் வைத்துக்கொண்டு சம்பந்தம் இல்லாத இடத்தில் நின்று வைகோ கருப்பு கொடி காட்டி விட்டு சென்றார்.

இதையும் படிக்க:  அய்யாக்கண்ணு வரிசையில் இணைந்த பனிமலர் திட்டிதீற்கும் திமுகவினர்.

அவரை வரவேற்று பாஜக இளைஞர் அணியினர் போஸ்டர் ஒட்டி வழிமேல் விழிவைத்து காத்திருப்பதாக அறிவித்தனர் இது மதிமுகவை சிறப்பான முறையில் பாஜகவினர் கவனிக்க தயாராக இருந்தனர் என்று உணர்த்தியது.

ஆனால் தற்போது திருப்பூர் வருகை தரும் மோடிக்கு வைகோ கருப்பு கொடி காட்ட வருகை தந்தால் அவரை சிறப்பாக கவனிக்க முழு ஏற்பாடுகள் முடிந்து விட்டதாம் அதிலும் யார் வைகோவை கவனிப்பது என்பதில் இந்துமுன்னணி மற்றும் பாஜகவினர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம்.

கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் இந்து அமைப்பினர் நல்ல பலத்துடன் இருக்கின்றனர் இங்கு செல்லும் வைகோவிற்கு எதுவும் ஆகிவிட கூடாது என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க:  பெரியாரிஸ்ட்களுக்கும் வைகோவிற்கும் செருப்படி கொடுத்த கவிஞர் தாமரை.

©TNNEWS24

Loading...