மோடியை விரோதியாக்கி இம்ரானை உயர்த்தி பிடிக்க அகிலேஷ் போட்ட திட்டம் யோகியால் அம்பலமானது !

நான்கு நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சாலையோர வியாபாரிகளை காவி உடையணிந்த இருவர் தாக்குவது போல ஒரு வீடியோ வெளியானது..

அதனால் உத்தரபிரதேசம் மற்றும் காஷ்மீரில் இந்து முஸ்லிம் இடையே ஒரு பதற்றமான சூழல் உருவானது , தாக்கியவர்கள் காவி உடை அணிந்திருந்ததால் அவர்கள் பாஜகவினர் என சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

யோகி அரசு அவர்களை கைதுசெய்ய காவல்துறைக்கு ஆணையிட்டது
அதை தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் தாக்கியவர்களை கைது செய்தனர் , அவர்களை விசாரித்தபோது தான் அதிர்ச்சிகர உண்மை வெளியானது

காவி உடை அணிந்து இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கியவர்கள் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஏவி விட்டதும் விசாரணையில் தெரியவந்தது..

இதையும் படிக்க:  சர்தார் வல்லபாய் படேல் பெயரில் இந்தியாவின் மிக பெரிய மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமாஜ்வாதி கட்சியில் உறுப்பினராக உள்ளனர் , மேலும் சமாஜ்வாதி கட்சியின் தீவிர தொண்டர்கள் என்பது அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது..

அகிலேஷ் யாதவ் ஏன் இப்படி ஒரு திட்டம் தீட்டி சதி செய்ய முயன்றார் என்றால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் , குறிப்பாக முசாபர் நகர் போன்ற பகுதிகளில் அவர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள்

அவர்களின் ஆதரவு கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கே கிடைத்தது , இந்த தேர்தலிலும் அவர்கள் மோடிக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்

எப்படியாவது ஷியா பிரிவு முஸ்லிம்களை பாஜகவுக்கு எதிராக திருப்பவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்.

இதையும் படிக்க:  இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்!

ஆனால் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்த உண்மை இப்போது வெளிவந்துள்ளது.

மேலும் காஷ்மீர் பிரச்னையில் மோடியை விமர்ச்சித்தும் இம்ரான் கானை ஆதரித்தும் ஏன் சமாஜ்வாதி பேசியது என்று இப்போது புரிகிறது என உத்திரபிரதேச முதல்வர் யோகி கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கள் அரசியல் லாபத்திற்காக சொந்த நாட்டையே பாகிஸ்தானிடம் அடகுவைக்கவும் எதிர் கட்சிகள் தயங்கமாட்டார்கள் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.

©TNNEWS24