ரஜினி அஜித் ரசிகர்களுக்கு இடையே கொளுத்திபோடு பரபரப்பாக இயங்கும் திமுக ஐடி செல்!

ரஜினி நடிப்பில் வெளியாகும் பேட்ட திரைப்படமும் அஜித் நடிப்பில் வெளியாகும் விஸ்வாசம் திரைப்படமும் வரும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாகின்றன.

சமூகவலைத்தளங்களில் மோதல் :

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்டை படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, இதன் ட்ரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது.

இதனையடுத்து அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியது வெளியாகிய சிறிது நேரத்திலேயே விஸ்வாசம் ட்ரைலர் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது.

திமுக ஐடி செல் தீவிரம் :

ரஜினி, அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் இதனை திமுக கச்சிதமாக தங்கள் அரசியலுக்கு பயன்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. ரஜினி ரசிகர்கள் போர்வையில் விஸ்வாசம் படத்திற்கு எதிராக மீம்ஸ் போடுவதும், அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் பேட்டை படத்திற்கு எதிராக மீம்ஸ் போடுவதிலும் படுதீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதையும் படிக்க:  பெண்களுடன் உல்லாசம் இதுவரை தமிழகத்தில் 16 பாதிரியார்கள் மீது வழக்கு. ஏன் விவாதம் நடத்த மறுக்கின்றன ஊடகங்கள்?

திமுகவின் இத்தகைய செயலை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.