ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை , முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அதிரடி..

காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் எஸ் எம் கிருஷ்ணா இவர் கடந்த 2017 -ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று அவரே பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் இன்று அவர் அளித்த சிறப்பு பேட்டியில்

நீங்கள் காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது ராகுல் காந்தி உங்களுக்கு இடையூறு செய்தாரா? என்று கேட்ட கேள்விக்கு

ஆம் ..கட்சியிலும் ஆட்சியிலும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ராகுல் காந்தி அனைத்து முடிவுகளிலும் இடையூறு செய்வார்.

உதாரணமாக அன்று பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தார் அதை மக்களவையில் தாக்கல் செய்ய முயன்ற போது

இதையும் படிக்க:  பதவிக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக்கொண்டு கேவலமான அரசியல் செய்யும் திருமாவளவன்

மக்களவையில் உறுப்பினராக கூட இல்லாத ராகுல் காந்தி அந்த சட்ட நகலை கிழித்தெறிந்து மன்மோகனை கடுமையாக கண்டித்தார் இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

சோனியா காந்தியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு

கட்சியின் தலைவராக இருந்த சோனியா காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராடினார் ஆனால் எந்த பதவியிலும் இல்லாத ராகுலின் செயல்பாடுகள் தான் எங்களை உளைச்சலுக்கு ஆளாக்கியது,

ராகுலின் தலைமை நிச்சயம் காங்கிரஸ் கட்சியை அழிவிற்கு தான் கொண்டு செல்லும்

உங்களது பேரன் காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்பதாக வரும் தகவல்கள் உண்மையா என்று கேட்டதற்கு

என் பேரன் எழும்பியல் மருத்துவராக உள்ளார் அவர் அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை எனவே இது போலியான தகவல் என்று கூறினார்.

இதையும் படிக்க:  திருநாவுக்கரசர் இதுவரை எத்தனை கட்சியில் இருந்திருக்கிறார் என்று தெரியுமா ?

ஒருவேளை ராகுல் பிரதமரானால் என்னாகும் என்று கேட்டதற்கு

அப்படி ஒன்று நடக்க வாய்ப்பில்லை அது நடந்தால் நல்ல வளர்ச்சி அடைந்து வரும் இந்திய திருநாட்டின் அது ஒரு பேரழிவாக இருக்கும்.

பல தலைவர்கள் போராடி சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்து வளர்த்து வரும் நமது நாட்டை ராகுல் காந்தி என்ற ஒற்றை மனிதன் அழிப்பதை பார்க்கும் அளவிற்கு எனக்கு மன வலிமை இல்லை என்றும் கூறினார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவருடைய கருத்து ராகுலின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக பலரும் கருதுகின்றனர்.

©TNNEWS24

Loading...