ராகுலுடன் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன் என ஸ்டாலின் பேசி முடிப்பதற்குள் விஞ்ஞான ஊழல் வழக்கில் சிக்கினார் திமுக Ex அமைச்சர் மகன் !

ராகுலுடன் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன் என ஸ்டாலின் பேசி முடிப்பதற்குள்   விஞ்ஞான ஊழல் வழக்கில் சிக்கினார்  திமுக Ex  அமைச்சர் மகன் இதுதான் ஊழலை ஒழிக்கும் முறையா ? 

சென்னை

நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டு பாஜக மற்றும் அதிமுக குறித்து விமர்சித்து வந்தனர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மோடி குறித்தும் ரபேல் குறித்தும் மிகவும் தீர்க்கமாக பேசினார்.  ரபேல் விமானத்தில் மோடி அரசு ஊழல் செய்துள்ளதாகவும் பாஜக அரசு ஊழலில் திளைக்கும் அரசு என்ற விதத்தில் பேசிக்கொண்டிருந்தார், மேலும் ஊழலை ஒழிக்க ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று ஆவேசமாக பேசி கொண்டிருந்தார்.

இதையும் படிக்க:  இனி தனி தொகுதியில் போட்டியிடமாட்டேன் கிருஷ்ணசாமி அறிவிப்பு , திருமாவளவனுக்கு திராணி இருக்கிறதா கேள்வி?


இந்த நேரத்தில் சரியாக

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1 கோடி அபராதமும் விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

மேலும் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன். 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் சென்னையில் உள்ள  இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகள் மூலம்  வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ₹78 கோடி சட்ட விரோதமாக அனுப்பியுள்ளார்.


இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சி.பி.ஐ விசாரணை மூலம் தெளிவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதி பெற்று தரப்பட்டன.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்ஸல் குஸைன் மற்றும் அவரது கூட்டாளி திமுக முன்னாள் அமைச்சர் மகன் மணி அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சரியாக இருப்பதால் இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் ஆவதாக தீர்ப்பளித்தார்.


இதையும் படிக்க:  ஏய்யா எவ்ளோ சென்டிமெண்டா பேசுனாலும் வைகோவை காமெடியனாக தான் பார்ப்பீர்களா ..!

மேடையில் ராகுலும், ஸ்டாலினும் மோடியை ஊழல்வாதி என்று சொல்லி வாய்மூடுவதற்குள்  திமுக EX அமைச்சர் மகன் அந்நிய செலாவணி மோசடி மற்றும் விஞ்ஞான ஊழலில் சிக்கி இருப்பது இதுதான் திமுக ஊழலை ஒழிக்கும் விதமா என பலரும் கிண்டல் செய்துவருகின்றனர்.


©TNNEWS24