ராமலிங்கம் கொலையை மறைக்க சந்தியா கொலையை கையில் எடுத்துள்ள தமிழக ஊடகங்கள்?

ராமலிங்கம் கொலையை மறைக்க சந்தியா கொலையை கையில் எடுத்துள்ள தமிழக ஊடகங்கள்?

சென்னை

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பெருங்குடி குப்பை கிடங்கில் கைகால்கள் தனி தனியாக வெட்டப்பட்டு கிடந்தது.

இந்த கொலை குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர் அவரது கணவர்தான் நடத்தையில் சந்தேக பட்டு கொலை செய்தது உறுதியாகி அவரும் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

ஆனால் தமிழக ஊடகங்கள் முடிந்து போன இந்த செய்தியை நேற்றில் இருந்து விடாபிடியாக ஒளிபரப்பி வருகின்றன, இதுகுறித்த காரணத்தை ஆராய்ந்த போது திருபுவனத்தில் மதம் மாற மறுத்த ராமலிங்கம் என்பவரை கொலை செய்த செய்தி மக்களுக்கு தெரிய வரக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டே இது போன்ற செய்திகள் வெளியாவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க:  கிறிஸ்துமஸிற்கு பணம் கொடுக்காத அரசாங்கம் எப்படி பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுக்கலாம்…திமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததன் பின்னணி

ஏற்கனவே தேனி மாவட்டம் பொம்மிநாயகன் பட்டியில் நடந்த கலவரங்களே மக்கள் மனதில் நீங்காத போது தற்போது திருபுவனத்தில் நடைபெற்ற கொலையானது தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக முடியும் என்றும் மேலும் இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தமிழக ஊடகங்கள் இப்படி ஒரு தலை சார்பாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.

மற்ற மாநிலங்களில் நடைபெறும் கொலைகள் குறித்து விவாதம் நடத்த நேரம் உள்ள ஊடகங்களுக்கு தமிழகத்தில் நடந்த இந்த கொலை குறித்து விவாதம் நடத்த நேரமில்லயா என்று பலரும் கேள்வி எழுப்பிவரும் வேலையில் இதற்கு ஊடகங்கள் தான் பதில் அளிக்கவேண்டும்.

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை , முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அதிரடி..