ராமலிங்கம் படுகொலையை கண்டித்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு 5 ஆயிரம் பேர் சேர்ந்து செய்த சத்தியம்

திருப்புவனம்
மதமாற்றத்தை தடுத்த செயலுக்காக பாமக முன்னாள் பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார், இதனை கண்டித்து இந்தியா முழுவதுமுள்ள இந்து அமைப்புகள் ஒன்று கூடி மிக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

தற்போது தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை, கும்பகோணம், திருப்புவனம் பகுதிகளில் கடை அடைப்பிற்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன இதில் இன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை ராமலிங்கம் கொலைக்கு எதிராக பதிவு செய்தனர்.
இதில் முக்கியமாக திருப்புவனம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்த காரியம் பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் திராவிட கட்சிகளின் மத்தியில் பயத்தையும் வரவழைத்துள்ளது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் இளைஞர்கள் இனி நாங்கள் எங்கள் மதத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே வியாபாரம் செய்வோம் சிறுபான்மையினத்தவர்கள் அவர்கள் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குவதுபோல் இனி நாங்களும் எங்களது உரிமைகளை காப்பாற்றி கொள்ள போவதாக சத்தியம் எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:  பெயர்தான் மூவர் அணி தொகுதிக்கு 30 ஓட்டு கூட இல்லை வந்தாலும் சேர்க்காதீங்க விரட்டி அடிக்கப்படும் பரிதாபம்!

மேலும் எங்களை போல் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இணைந்து இந்துக்கள் மத்தியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் அப்படி செய்தால் கொலை குற்றவாளிகளை ஜாமினில் எடுப்பது போன்ற தவறான செயல்களில் பலர் ஈடுபடுவது குறையும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
©TNNEWS24
………………………
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...